Thursday, November 17, 2011

எது இலக்கியம்


எது இலக்கியம்

மனதை தொட்டு மண்ணையும் விண்ணையும் தொடும் இலக்கியம்

இலக்கியமா!

ஆம் இலக்கியம் தான்.

எந்தவொரு எழுத்து

ஒரு மனிதனை மதிப்படையச் செய்யகின்றதோ
அது இலக்கியமாகி விடுகிறதா!
ஆம்

இலக்கை அடைவது இலக்கியம்  என்றால்
அதிலென்ன
சங்க இலக்கியம் வரை தற்கால இலக்கியம்
எந்தவொரு இலக்கியம்

ஒரு மனிதனின் வாழ்வில் இன்ப துன்பங்களை வெளிகாட்டுகின்றதோ

 அது அவரவருக்கு பிடித்த இலக்கியமாகி விடுகிறது.

இலக்கியம்  யாப்பு நடையில் தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது

இலக்கியம் பாமரனுக்கும் பயன் தர வகையில் அமைந்தால், அவ்விலக்கியெழுத்து மண்ணையும் தொடும்  விண்ணையும் தொடும்,

Friday, October 28, 2011

கடவுள் படைத்த கடைசி பிறவி


அறிவுக்கு வளர்ச்சியையும்
ஆற்றலுக்குஉணர்ச்சியையும்
கடவுள் படைத்த கடைசி பிறவி
இன்பத்துக்கு இணைப்பை ஊட்டும்
ஈகை குணம் கொண்ட பிறவி
உறவுகளை இணைக்கும் மேம்பாடும்
ஊரார்களின் உன்னத பண்பாடும்
எண்ணங்களை உரமாக்கும் நாகரிகமும்
ஏறுமுகமாய் வாழும் ஆறாம் அறிவு -நம்மையாளும் அறிவு
ஐம்பூதங்களின் இயற்கை பிறவி
பகத்துண்டு வாழும் பாரம்பரியமும்
வந்தாரை வரவேற்கும் விருந்தோம்பலும் கொண்ட பிறவி
ஒற்றுமையை விதையாக்கி
உறவுகளை உரிமையாக்கி
உள்ளுயிரை உரமாக்கும்
 உண்மை பிறவி
 உயிருள்ள பிறவி
கடவுள் படைத்த கடைசி பிறவி
கருணையுள்ளம் கொண்ட பிறவி
கடவுள் படைத்த கடைசி பிறவிமனிதப்பிறவி எல்லா உயிரினமும்
மதிக்கும் பிறவி

Sunday, October 23, 2011

எது தீபாவளி?

புத்தாடை உடுத்தி
புதுமையான நடைமுறையை பயன்படுத்தி -அதை
வாழ்வில் புகுத்தி
பூமியை நாசம் செய்வதா?
சப்தங்களும்,வெடிகளும்
சாலையில் சங்கீதம் பாடுவதா?

அணுகுண்டு வெடி
ஆட்களையே அலற செய்வதா!


நரகாசுரன் அழிவு

மக்கள் முகத்தில் மகிழ்ச்சி
இருள் விலகி
ஒளி வந்தது

இயற்கை ஒளி
செயற்கை ஒளியானதால்
நகரெல்லாம்
மாசுக்காற்றுக்கு ஒளிவந்தது

வாழ்க்கை
மனதில் ஒளியில்ல
வெடிகளும்,வெளிச்சமும்
பட்டாசு வந்ததால்
வேடிக்கையும்,விநோதமானது


எது தீபாவளி

மனதில் ஒளியில்லை

மண்ணில் மலர்வது ஒளியல்ல
மனதில் மலர்வது ஒளி
நினைவில் நிற்பது-அதன்
வளி
மனதில் உறைந்து
நாவினில் நிறைந்து
கண்ணில் கரைந்து-மற்றவர்
மனதில் மலர்வதே
தீபாவளி


தீபாவளி திருவிழா என்பது
மனித உயிரினங்களின் மனதின் தீபத்திருவிழா ஆனால் வளர்ந்து வரும் சமூகம்
வெடிகளும் வெளிச்சமும் தீபாவளி ஆகி விடுகிறது

ஆகவே மனித சமூகம் செயற்கை சுவாசிக்காமல்
இயற்கையான
 உள்ளம் என்னும் தீபத்தை மனதில் ஏற்றினால்
வாழ்க்கை ஒளியாகும்
இது உணர்ந்தால்
உங்கள் வாழ்க்கைக்கு வழியாகும் 


தீபாவளி வாழ்த்துகள்......Friday, September 30, 2011

உலகில் மதிக்க முடியாதது

என் இனிய உறவுகளே
உங்கள் பண்பிற்கும் பாசத்திற்கும்
தலைவணங்கும்
தமிழ் மகன் பேசுகிறேன்

மனிதனின் மொத்தச் சொத்து
மன்னரால் மதித்த சொத்து
மக்களால் மலர்ந்த சொத்து

விண்ணிலும் மண்ணிலும் விளைந்த சொத்து
விலை கொடுத்து வாங்க முடியாத சொத்து

பகைவரால் பறிக்க முடியாத சொத்து
படாத துன்பம்- பல
பட்ட போதும்
பண்பால் படைத்த சொத்து
வாழ்நாளில் நம் வளர்ச்சிக்கு
வள்ளலாய் இருக்கும் சொத்து
உடலும் உயிரும்
உணர்வான சொத்து

உறவுகளோடு இணைந்து
உறவான சொத்து

எண்ணும் எண்ணம் எங்கும்
எழிலான சொத்து
கால ஏட்டில்
பதிவானது
நம் வாழ்வின்  பயணமானது
அன்னையின் உயிரானது
அகிலத்தின் வெளிச்சமான
மூன்றெழுத்து சொத்து
மூச்சான அன்பு சொத்து-அது
அனைவரின் சொத்து
எல்லா உயிரிடமும் அன்பு காட்டுவோம்
வாழும் நாளை வளமாக்குவோம்

Monday, September 26, 2011

அறிமுகம்

நண்பர்களே என் பெயர் மணிகண்டன்.

நான் கே.எஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோட்டில்

இளங்கலை தமிழ் பயின்று வருகிறேன்.

இயன்றவரை தமிழிலேயே பேசி வருகிறேன்..

என் தாய் மொழியின் பண்பாடுகளையும், இலக்கியங்களையும் அறிந்துகொள்வதிலும், அதைப் பகிர்ந்து கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..

Thursday, September 8, 2011

நிலையாமை

 கருவறையில் பிறந்து
கல்லறையில் முடியும்
வாழ்வில் காலம் ஒரு விளையாட்டு -அந்த
கால விளையாட்டில்
நாமெல்லாம் நாயகன்கள்,நாயகிகள்
நடிப்பு மட்டுமே இவ்வரங்கில் -வேறு
எந்தவொரு பொருளும் சொந்தமில்லை
அதற்குள் எதற்கு- இந்த
கணக்கு பிணக்கு பார்க்க ஆரம்பித்தோம்
என்றால் கால் வழி  கூட கடக்க முடியாது.

Thursday, July 14, 2011

பேச துடிக்கும் இதயம்-

வண்ண நீர் தெளிச்சு
மயில் தோகை கூந்தலிட்டு
வார்த்தைகள் பேச துடிக்கும்-உன்
இதழ் சொல்லும் துடிப்பு
இமைகள் மூடிய போதும் -உன்
விழிக்கு வழி விடு என்னுடன் பேச...
கருவறையில் பிறந்து
கல்லறையில் மறையும் உயிரினமே!
உன்னை நினைக்கும் போது-என்
உள்ளம் உருக்குலையுது
உன் பேச்சு-அதுவே
என் மூச்சு
ஆசையெனும் ஈரெழுத்தில் தோன்றி
காதலெனும் மூன்றெழுத்தில் வாழும் உயிரே!
வாடாத மனமே-உன்
வாழ்க்கை வளமாகும் தருணம் வந்துவிட்டது.
பேச துடிக்கும் இதயமே! பேசு
இனி வசந்தமே! வண்ணப் புள்ளி கோலமிட்டு அலங்கரிக்கும் நேரம் 

Tuesday, July 5, 2011

கவிதை

வார்தைகள் முட்டிக்கொள்ளும் காதல்
வாசிப்புகள் பேசும் முத்தம்
கண் பார்க்கும்-அந்த
காதல் பார்வை
கை விரல் தொடும்
உணர்ச்சி-அதுவே
புணர்ச்சியாக வரும்
இரசித்து ரசித்து வ்ரும்
ருசி பார்க்க
நான் கொண்ட பசியால் வந்தது-தான்
ஓவியம்-அதுவே
கலையாத சித்திரம்
கண்ணை பறிக்கும்
 பூங்கொத்து-என்
மனதை மாற்ற-வந்த
தமிழ் கொத்தே
என் சொத்தே   ----கவிதை----

Sunday, February 13, 2011

இதயத்தின் திருநாள்காதல் உள்ளத்து அன்பை
 உருக தொடுப்பது
வெள்ளை மனதை வெளிப்படுத்தும்
நல்ல மனம் இனம்
சேரும் இனிய நாளாம்-இந்த
இதயத்தின் திருநாள்
மனம் இனம் காதல்

Friday, February 11, 2011

கவிபேசலாமா

கனிவோடு கீழ் வானம்
புன்னகைக்க

காற்றோடு மிதக்கும் அலை
சிலு சிலுக்க

தென்றலோடு
அசைந்தாடும்
மயிலோடு

கவிபேசலாமா?

Thursday, February 10, 2011

பூ வருமா?

பூ வருமா?
நினைவு அலைகளில்
நீந்திக் கொண்டிருக்கும்
காதல் பூவை
காற்றில் பறக்க விட்டு
ஏங்கி தவிக்கும்
காதலனின் ஏக்கத்திற்கு
தாகம் தணிக்க வருமா?
அந்த காதல் பூ

Saturday, January 1, 2011

புதிய எழுச்சி

அன்னை வழியிலே அனைவரும் நடக்க வேண்டும்
ஆன்றோர் சொல் படி கேட்க வேண்டும்
இன்முகத்தோடு அனைவரும் ஏற்க வேண்டும்
ஈன்ற நெஞ்சம் குளிர வேண்டும்
உண்மையாய் வாழ வேண்டும்
ஊர் புகழ வேண்டும்
எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும்
ஏன்? எதற்கு? என்ற கேள்வி எழ வேண்டும்
ஒரே வழி அது நல்வழி பின்பற்ற வேண்டும்
ஓதல் தான் சிறந்ததென நம்ப வேண்டும்
சமத்துவமே- நமது
தத்துவமென நிலை மாற வேண்டும்
சாக்கடை போல் ஓடாது
பூக்கடை போல் மணக்க வேண்டும்
சாதனைகள் பல புரிந்திட வேண்டும்-நம்
சோதனைகள் பல அகன்றிட வேண்டும்
சரித்திரத்தில் இடம் பெற வேண்டும்
தரித்திர பிசாசு நம்மை விட்டு அகழ  வேண்டும்
வாழ்க்கை வாழ்வதற்கே !
வளம் பெறுவதற்கே!
வரலாறு படைப்போம்
புதிய எழுச்சியுடன் புறப்படுவோம்
புதிய நோக்கில்-நம் பயணம் பயணிக்கட்டும்.....