Thursday, August 15, 2019

ஒப்பில்லாத சமுதாயம்

அப்துல்ரகுமானின்  கவிதையில் சமுதாயச் சிந்தனை


உலக மொழிகளினுள் உயர்வான மொழியாக கருதப்படுவது தமிழ் மொழி. 

அத்தமிழ் மொழி உலக மொழிகள் போற்றும் அளவிற்கு செவ்வியல் பண்பும், செம்மாந்த சீரமைப்பும் கொண்டு திகழ்கின்றது. 

அத்தகைய தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் விதமாகக் காலந்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. 

அவற்றுள் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் புதுக்கவிதை புத்துயிர் பெற்று நாட்டில் நடக்கும் வறுமை, காதல், அரசியல், உழைப்பின் மகத்துவம், குடும்ப அமைப்பு நிலைகள் போன்ற சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வண்ணமாகக் காட்சியளிக்கின்றன. 

அந்த அடிப்படையில் அப்துல் ரகுமானின் புதுக்கவிதையில் ஒன்றான நேயர்விருப்பம் எனும் புதுக்கவிதையில் இடம் பெற்றிருக்கும் சமுதாயச் சிந்தனைகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நேயர் விருப்பம்

தமிழ்க் கவிதை உலகில் முதன் முதலில் மரபில் புதுக்கவிதையின் போக்கையும், நோக்கத்தையும் புகுத்தி வெற்றி கண்டவர். தமிழ்க் கவிதையில் சோதனையும், சோதனையில் சாதனையும் செய்திருப்பவர் என்று அப்துல் ரகுமானைப் பற்றி கவிஞர் மீரா கூறுகின்றார்.

             காலவரிசைப்படி பார்த்தால் ‘நேயர் விருப்பம்’ தான் முதல் கவிதைத் தொகுதியாக வெளிவந்திருக்க வேண்டும். 
       
ஆனால் ‘பால்வீதி’ அவருடைய முதல் தொகுதியாக முந்திக் கொண்டதால் இது இரண்டாவது தொகுதியாக வெளிவர வேண்டியதாயிற்று. 
          
நேயர் விருப்பத்தில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் கவியரங்கக் கவிதைகள். 
கவியரங்கத்தில் தமிழ்நாட்டில் முதன் முதலாக அரங்கேறிய புதுக்கவிதை ‘மண்’ (1963) பேரறிஞர் அண்ணா ஏழெட்டு முறை திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லிக் கேட்டுப் பாராட்டிய பெருமையும் இந்தக் கவிதைக்கு உண்டு.

 இரண்டே சீர் கொண்ட ஒரே அடி என்றும், இத்தனை சிறிய வடிவம் தமிழில் மட்டுமல்ல நான் அறிந்த வரையில் வேறு உலக மொழிகளிலும் இல்லை என்று அப்துல் ரகுமான் கூறியுள்ளார்.


உழைப்பின் மகத்துவம்

இன்றைய சமுதாயத்தில் உழைக்காமல் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று பலர் பகல் கனவு கண்டு ஏமாற்றம் அடைகின்றனர். 

அப்படி பட்டவர்களுக்கு உழைப்பின் சிறப்பையும், உழைப்பின் வாயிலாக வரும் வெற்றி தான் நிலையான மகிழ்ச்சியையும் அளிக்கும் என்று நேயர் விருப்பத்தில் ‘மண்’ என்னும் தலைப்பின் கீழ் வரும் கவிதை தொகுப்பு எடுத்துரைக்கிறது.

“நீங்கள் என்னைக்
காலால் மிதிக்கிறபோது
பெருமை அடைகிறேன்
ஆனால் என்னில்
பிச்சைப் பாத்திரம் செய்து
கையில் ஏந்துகிற போது
நான் அவமானப்படுத்தப்படுகிறேன்” (நேயர் விருப்பம், ப.14)

எனும் கவிதையில் சமுதாயத்தில் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் எடுத்துப் பிச்சை எடுக்காமல், அனைத்துத் தரப்பு மக்களும் உழைத்து வாழ வேண்டும் என்ற நயமிக்க கருத்தினைக் கூறுயிருப்பதைக் காணமுடிகின்றது.


திருமணம் பற்றிய எண்ணம்

காதலுக்குப் பின் ஒரு ஆணும், பெண்ணும் கை கூடுவது இல்லற வாழ்வான திருமணம். அத்திருமண வாழ்வு நரகவாழ்வில் அமையாமல் சொர்க்க வாழ்வில் அமைய வேண்டும் என்பதைக் கூறியுள்ளார். 

“திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படமாட்டாது
திருமணங்கள் சொர்க்கத்தை
நிச்சயிக்கும்” (நேயர் விருப்பம், ப.62.)

ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண உறவு என்பது சொர்க்க வாழ்வையே உருவாக்க வேண்டும் என்று எதார்த்தமாகக் கூறியிருப்பது போற்றுதலுக்குரியதாகும். அதே நேரத்தில் ஒரு திருமணம் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதனையும் பதிவு செய்துள்ளார். அதை,

“தாலிக் கயிறு ஒரு
ஆயுள் தண்டனையின்
கழுத்து விலங்காகாது!
திரவப் பெண்மைக்குத்
திடப்பொருள் கிண்ணமாய்
ஆண்மை இருக்குமங்கே!” (நேயர் விருப்பம், ப.63.)

என்ற கவிதையடியின் வழியே உணரலாம். மேலும், வளரும் நாடுகளில் நாட்டை உயர்த்தப் பொருளாதாரம் வளர்வதைப் போல, இங்கே அதற்கு மாறாக இந்திய நாட்டில் பெண்களை வீழ்த்த வரதட்சணை வளமாக வளர்வதைக் கண்டிக்கும் நோக்கில் ஆண்களுக்குக் சவுக்கடி கொடுத்துள்ளதாக அமைத்துள்ளார். 

“மணம் என்றால் பணம் கேட்கும்
ஆண்விபச்சாரத்தை
பிரம்மச் சாரியத்தால்
தண்டிக்கும் நீதியுண்டு!” (நேயர் விருப்பம், ப.63.)

கடவுள் கொடுத்த குறுகிய கால வாழ்நாளில் நிலையில்லா வரதட்சணைக் கேட்பதை விட்டுவிட்டுத் தன் இல்லற மனைவியுடன் இனிமையாக வாழ ஆண்கள் உணர வேண்டும்.

ஒப்பில்லாத சமுதாயம்

சமுதாயத்திலும், நாட்டிலும் காணப்படும் பலவித இன்னல்களை எளிமையான மொழிநடையில் வருத்தத்துடனும், வேதனையுடனும் கூறியுள்ளார்.

“பொருளியல் அறிஞர்கள்
புத்தகத்தில் காட்டும்
பூலோக சொர்க்கம்” (நேயர் விருப்பம், ப.56)

“அரசியல் வாதிகளின்
அலுக்காத வாக்குறுதி” (நேயர் விருப்பம், ப.56)
“நல்லதொரு சமுதாயம்
நாம் காண வேண்டும்
அதற்காக
எட்ட முடியாத
இலட்சியங்கள் தேவையில்லை” (நேயர் விருப்பம், ப.57)

நாட்டின் உண்மையான நிலைக்கு ஏற்ப மக்கள் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய நிலையை மறந்து எதிர்பார்ப்புக்களை நாம் வளர்த்துக் கொள்ள கூடாது என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஓர் ஒப்பில்லாத சமுதாயம் எவ்வாறு அமையும் என்பதை அப்துல் ரகுமான் தன்னுடைய கனவாக மட்டும் கொள்ளாமல் அவை அமைந்தால் எவ்வாறு சிறப்பாக இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். 

“அனைவரும் ஓர் நிறை
அல்ல
உழைக்கும் சாதியே
உயர்ந்த சாதி
அங்கே 
வயிறு மட்டுமல்ல
மனமும் நிறைந்திருக்கும்” (நேயர் விருப்பம், ப.65.)

“கடமை அங்கே கவுரவம்
உரிமை அங்கே ஊதியம்
சத்தியம் அங்கே சமயம்
இதயம் அங்கே முகவரி
புன்னகை அங்கே பொதுமொழி” (நேயர் விருப்பம், ப.65.)

இருபத்தியோராம் நூற்றாண்டில் நம்நாடு நல்லதொரு சமுதாயமாக அமைய வேண்டும் என தன் எதிர்பார்ப்புகளை வார்த்தைகளாக வடித்துத் தந்திருப்பது சிந்தனைக்குரியதாகும்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா இன்குலாப்

                                                                 சிவப்பு 
         பலருக்கும் உதட்டுச் சாயம்






.                                                                                                                                                             

 இன்குலாபிற்கோ காயத்திலிருந்து வடிகிற ரத்தம்” என்னும் கவிக்கோவின் கூற்றிற்கேற்ப மக்கள் கவிஞர்  இன்குலாப் விருதுகளால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்.

காவல்துறையின் இரவு நேரத்து அழைப்புகளும், விசாரணைகளும், சிறைகளுமே அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் எனச் சொல்லலாம்
.
எவ்வகையான சாதி, மத வட்டத்திற்குள்ளும் தன்னை அடையாளப்படுத்தாமல் மக்கள் மனங்களில் நிறைந்த, பாவலர் 

இன்குலாபின் நேர்காணல்கள் “மானுடக் குரல் - இன்குலாப் நேர்காணல்கள்” என்னும் பெயரில் தமிழ் அலை பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு கால கட்டங்களில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பாக இது அமைந்துள்ளது.


நேர்காணல்களுக்குள் நுழையுமுன் கவிஞரது கவிதை வரிகள் சிலவற்றை மீளவும் நினைவு கொள்ளல் பொருத்தமானது என்பதால், சில கவிதைகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன

எல்லா ஆரம்பக் காலக் கவிஞர்களும் தங்கள் கவிதைக்கான உந்துதலைத் திரைப்படப் பாடல் மெட்டுகளிலும், நாட்டுப்புறப் பாடல்களின் ஈடுபாட்டிலும் பெறுவார்கள். 

அதைப் போன்று கவிஞர் இன்குலாப் தன்னுடைய கவிதை 

இலக்கியத்தின் பிரவேசம் முதலில் பாடல்களாக அரும்பிப் பின்னர்,

     புதுக்கவிதையாகப் பரிணமித்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடைய கல்லூரிப் படிப்பின் போது, அறிமுகமான மீரா - இராசேந்திரன்(வகுப்பாசிரியர்), பிரேம்சந்திரன் (ஆங்கிலப் பேராசிரியர்) சுப்பையா என நீளும் ஆசிரியர்களின் மூலமாகத் தமிழுணர்வும், இயக்கச் சிந்தனையும் கொண்டவராகத் தன்னை மெருகேற்றிக் கொண்டதை நினைவு கூர்கிறார்.

தொடக்கக் காலத்தில் தி.மு.க.வின் ஆதரவாளராக இருந்தவர் கவிஞர் இன்குலாப். 1968இல் நடந்த வெண்மணிச் சம்பவம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதைப் பதிவு செய்துள்ளார். அந்நிகழ்வைக் குறிப்பிடுகையில், “உழைக்கின்ற தொழிலாளி வகுப்பினர் மீது, உழவுத் தொழிலாளியினர் மீது தொடுக்கப்பட்ட கோரமான, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்” (ப.44) என்று கூறியிருக்கிறார்.


         அதன் பின்னர் 69களில் நக்சல்பாரி இயக்கங்களுடன் கொண்டிருந்த தொடர்பு பொதுவுடைமை இலக்கியங்களை ஆர்வமுடன் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
சோஷலிசமும், கம்யூனிசமும் பேசியவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு அவர்களோடு தொடர்பு கொண்டார். புரட்சிகர அமைப்பில் இணைத்துக் கொண்டு, இலக்கியப் பணிகள் ஆற்றியவண்ணம், இன்னும் சொல்லப்போனால் தலைமறைவு வாழ்க்கையையும் கொஞ்ச காலம் வாழ்ந்தவர்.

அவசர கால நிலை 1975இல் பிறப்பிக்கப்பட்டபோது, ‘மனிதன்’ இதழில் வெளிவந்த பல்வேறு கவிதைகளும் அதற்காக அன்றைய நாளில் காவல்துறை தேடியலைந்ததும் தனிக்கதையாக இந்நேர்காணல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
தற்காலத்தில் தலித் இலக்கியங்கள், பெண்ணிய மொழி ஆகியனவற்றின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது.


              இது குறித்து வினா முன்வைக்கப்படுகையில், மொழி என்பது சிந்தனையை வெளிப்படுத்தும் முறை.
சிந்தனை விடுதலையை அவாவி நிற்கையில் மொழியின் மீது விதிக்கப்பட்டுள்ள மரபு ரீதியான கட்டுப்பாடுகளை மீறுதல் தவிர்க்க முடியாது. இதைக் காண்பவர்கள் தான் அதிர்ச்சியடைகின்றனர்.


மொழி என்பது உயர் மக்களுடைய பண்பாட்டுத் தளத்தில்தான் இயங்கி வருகின்றது. ஆகவே, அத்தகைய பண்பாட்டுத் தளத்தை நாடாமல், தனித்த தொரு விடுதலையை நோக்கிய நகர்வாக தலித், பெண்ணிம் சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.


             மதம், சாதி, அரசியல் முதலானவற்றின் அதிகாரம் குறித்துக் கேள்வி எழுப்புகையில் தெரியக்கூடிய நியாயம், அந்த நியாயங்களுக்குத் தடையாக அதிகாரம் நிற்கையில் அதை உடைத்துவிட்டுத் தாண்டிச் செல்ல வேண்டும் என்னும் நினைப்பே தன் கவிதையில் பாடுபொருளாக இருப்பதை உணர்த்துகிறார்.


               கவிதைகள் மட்டுமின்றி, சிறுகதை, கட்டுரை, நாடகம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிய இன்குலாபின் நாடகங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நீண்ட நெடிய போராட்ட வரலாறே ஆகும்.

               “வரலாற்றை ஒரு திறனாய்வு அடிப்படையில் பொற்கால மாயைக்கு இடம் கொடுக்காத வகையில், மன்னனுக்குரிய புகழ்பாடாமை,
போராட்டத்தையும் அழகியலையும் இணைக்கும் முயற்சி குறித்துக் கவிஞரின் நேர்காணலொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


              ‘அழகியல் என்பது ஓர் உயிர் இயல்பு. நான் இயற்கையைப் பார்க்கிறேன். என் படைப் புகளில் அதைக் கொண்டு வர முயற்சிக்கிறேன்’ என்று கூறும் கவிஞர் இன்குலாப் போராட்டத்தைப் பற்றி எழுதுவதும்,

அழகியல் மறுக்கப்பட்ட நிலையில் வெவ் வேறு விதங்களில் அதனை மீட்டெடுப்பதற்கான கோரிக்கைதான் என்பார். (பக்.125)
போராட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த ஓர் அனுபவமிக்க கவிஞரின் வாழ்வியலைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்நூல் அமைகிறது-.


சதையும் எலும்பும் நீங்க வச்சதீயில் வேகுதே-ஒங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே
எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க
எரியும்போது எவன் மசுரைப் புடுங்கப் போனீங்க?
மனுசங்கடா..நாங்க-மனுசங்கடா


என இன்னும் பல கவிதைகளில் அணையா நெருப்பாக வெண்மணி அவருடைய வரிகளில் எரிந்து கொண்டே இருக்கிறது.மனுசங்கடா பாடலை கே.ஏ.குணசேகரன் மெட்டமைத்து முதன் முதலாக தமுஎசவின் மேடைகளில் பாடிய போது காற்று வெளியெங்கும் தீப்பற்றக்கண்டோம்.


வெண்மணியின் வரலாற்றை இந்த நாலு வரிகளுக்குள் துடிப்போடும் உயிர்ப்போடும் அதே நெருப்பின் வெக்கையோடும் சொல்ல முடிந்ததே .இந்த எழுத்தின் வலிமை கண்டு அன்று போலவே இக்கணத்திலும் நான் வியந்து நிற்கிறேன்.


எனக்குள் நெருப்பை மூட்டி என்னை இடது பக்கம் நின்று இயங்க வைத்த பல கவிதைகளை இன்குலாப் தந்து கொண்டிருந்தார்.கனவுகளின் இடத்தில் விஞ்ஞானத்தை வைத்த உங்களை ஒரு மனிதராகக் கண்டே மரியாதை செய்கிறோம் என்று கார்ல் மார்க்ஸ் பற்றி அவர் எழுதிய எழுச்சியூட்டிய ஒரு கவிதை,

நாடு நாடாக விரட்டப்பட்டீர்

ஊர் ஊராகத் துரத்தப்பட்டீர்
இன்று

ஒரு பகலைப்போல
வெளிப்படையாகவும்
ஒரு பூகம்பம்போலத்
தலைமறைவாகவும்
நீங்கள் நடந்து செல்லாத
நாடேது?
ஊரேது?

அவர் எழுதிப் பரபரப்பையும் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்த கவிதைகள் என கண்மணி ராஜம் ,ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலம், ஸ்ரீராஜராஜேச்சுவரியம் போன்ற கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்

     .இன்று மீண்டும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை திமுக ஆட்சி கொண்டாடியபோது இன்குலாபின் ஸ்ரீராஜராஜேச்சுவரியம் கவிதையின் வரிகளைத்தான் தமுஎகசவின் பல மேடைகளில் முழங்கினோம்:


ஆயிரம் ஆண்டு மூத்த என் தங்கையின்
காலில் கட்டிய சதங்கை
இந்தப் பெரிய கோயில் முற்றத்தில்
அழுது கொண்டிருக்கிறது
இன்னும்
இதனுடைய ஒவ்வொரு கல்லிலும்
என் சகோதரன் தசைகள்
பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.
வல்லாங்கு செய்யப்பட்டுப் பிறந்து கொண்டிருக்கும்
நான்
கூசி நிற்கிறேன்.

இந்தக் கவிதைகளும் யுகப்பிரளயம்,பிரமிடுகள் போன்ற நெடுங்கவிதைகளும் இன்று வாசிக்கையில் ஆயாசம் தந்தாலும் அன்று இளம் பருவத்தில் எமக்குக் கல்வி புகட்டிய கவிதைகளாக விளங்கின.கல்வி பற்றி அவர் எழுதிய வரிகள் இன்றைக்கும் எத்தனை பொருத்தப்பாடுடையவையாகத் திகழ்கின்றன:

தாமரைப் பீடத்தில்

இருந்த சரசுவதியை

நிலப்பிரபுத்துவம்

எழுப்பிக்கொண்டுபோய்

ஏகாதிபத்தியத்தின்

மடியில் அமர்த்தியது.

கலைமகள் பின்பு
கவுன் மாட்டிக்கொண்டாள்

வீணையிலிருந்து
இங்கிலீஷ் ம்யூசிக்.
தொழிற்சங்கங்களின் தேவை,
பணி பற்றிய நக்சல் பார்வை 

கொண்ட அவருடைய கவிதை வரிகள் அப்போதும் எனக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை.இப்போதும் ஏற்க முடியவில்லை.

புரட்சி ஓங்குக                                                                                                                                                                   
என்ற இடிகளின் முழக்கத்தை
ஒலிக்க வேண்டிய உனது பேரிகை
“ கூலி உயர்வு

போனஸ்”

என்று கொசுக்களைப் போலவா
முணங்கித் திரிவது?

வர்க்கபோதம் அல்லது வர்க்க உனர்வு என்பது தானே தொழிலாளி வர்க்கத்துக்கு வந்து சேராது.அது தொழிற்சங்கப் போராட்டங்களின் வழியே ஊட்டப்பட்டு உருவாக்கப்படுவதுதான்.லெனின் காட்டிய வழியும் அதுதான்.

தொழிற்சங்க இயக்கத்தின் மீது ஆரோக்கியமான விமர்சனம் வைக்கலாம்.ஆனால் கொசுவென்று பேசிக் கொச்சைப்படுத்தும் பார்வையை என்னால் ஏற்க இயலாது.

அதே போல பகத்சிங் சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசியதை நக்சல் பாதைதான் சரியானதென்று சிம்பாலிக்காக காட்டுவதாக எழுதப்பட்ட கவிதையும் நெருடா பற்றிய கவிதையில் சிலிப் புரட்சி  காரணம் அவர்கள் வாக்குச்சீட்டை நம்பி நக்சல் பாதையில் ஆயுதம் ஏந்திப் போகாததுதான் என்றெல்லாம் எழுதியிருப்பது

 வாசிக்கும்போதே ஓவராத்தான் எழுதிட்டார் தோழர் என்று நினைத்ததுண்டு.ஆனாலும் அது அவருடைய பாதை.

அவருடைய தேர்வு.அவருடைய சுதந்திரம்.நம் கருத்து நம்மோடு.அதற்காக அன்பே உருவான இனிய அம்மனிதரை நம்மால் கடந்து செல்ல முடியுமா என்ன?
என்பதை சிந்திப்போம்.

புதுக்கவிதை முனைவர்.இரா.குணசீலன்.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)


முன்னுரை
காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பாஆசிரியம்வஞ்சி,கலிபரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்
·         புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்
·         பழையன கழிதலும் புதியன புகுதலும்
        வழுவல கால வகையினானே  என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல்

யாப்புச் சிம்மாசனம்

எதுகைப் பல்லக்கு

தனிமொழிச் சேனை

பண்டித பவனி

இவை எதுவுமில்லாத

கருத்துக்கள் தம்மைத் தாமே

ஆளக் கற்றுக்கொண்ட புதிய

மக்களாட்சி முறையே புதுக்கவிதை

எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம்
        புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
·         ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு‘புதிதாக்கு’ (Make It New) என ஒரு கட்டளைச் சொற்றொடரைப் பிறப்பித்தார்.
·         “சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்றார்பாரதி.
Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர், ரிம்போ, மல்லார்மே,ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன்,இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட்போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில்‘வசன கவிதை’ என்றும் பின்னர் ‘சுயேச்சா கவிதை’லகு கவிதை’ விடுநிலைப்பா’ என்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.
புதுக்கவிதையின் வளர்ச்சி
வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்றபுதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத்தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால்காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும்.பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி,கு.ப.ராசகோபலன்,வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன்,போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்துதமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.
புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்
1.        மணிக் கொடிக் காலம்
2.        எழுத்துக் காலம்
3.        வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில்தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப்பொலிவூட்டின
1.மணிக்கொடிக் காலம்
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ்மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன்,சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள்புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன.  இவற்றுள்மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால்இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர்.இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளான.பிச்சமூர்த்திகு..ராசகோபாலன்,.நாசுப்பிரமணியன்புதுமைப்பித்தன் போன்றோர்மணிக்கொடிகாலத்துக் கதாநாயகர்களாக விளங்கினர்.
 2.எழுத்துக் காலம்
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை,கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில்புதுக்கவிதையை வளர்த்தன.ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்துவைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில்தொடர்ந்ததுமயன்சிட்டிவல்லிக்கண்ணன்,ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா,  .நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்குசிறப்பு சேர்த்தனர்
3.வானம்பாடிக் காலம்
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலியஇதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமைதந்து வெளியிட்டன. புவியரசுஞானி,முல்லைஆதவன்அக்கினிபுத்திரன்சிற்பிகங்கைகொங்காண்டான்தமிழ்நாடன்சக்தி கனல்,மு.மேத்தாதமிழன்பன்,  ரவீந்திரன் முதலியோர்வானம்பாடிக் கவிஞர்களாவர்
                                   
        சில புதுக்கவிதைச் சான்றுகள்
  நல்ல காலம் வருகுது                                                               உன்கையிலா கடிகாரம்?
   நல்ல காலம் வருகுது                                                                கடிகாரத்தின் கையில்
  தெருவிலே நிற்கிறான்                                                                            நீ!
குடுகுடுப்பைக் காரன்!                                           

முடிவுரை
 மாறும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாததுஎன்பதற்குத் தக்க சான்றாக புதுக்கவிதை வளர்ச்சியைக்கூறலாம். மேற்கண்ட கட்டுரையின் வழியாக தமிழில்புதுக்கவிதையின் தோற்றத்தையும்அதன்வளர்ச்சியையும் நன்கு உணரலாம். mybrotherunathamizhblogspot.com

புதுமைப்பெண்- பாரதியார்

                                    

                                               புதுமைப்பெண்- பாரதியார்

                     


                 ஆண் கல்வி கற்றால், அது குடும்பத்திற்கு மட்டும் பயன் தரும்; ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் குடும்பம், நாட்டிற்கும் பயன்தரும்.

'பெண்ணுக்கு பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ என்ற பாரதிதாசனின் பெண்ணுரிமை உணர்ச்சி வரிகள் நாட்டின் பெண் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்தது.


எது பெண் சுதந்திரம் :

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு உள்ள சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டு தான், அந்நாட்டின் மனித உரிமைகள் எந்த அளவிற்கு மதிக்கப்படுகிறது என்பதை அளவுகோலாக வைத்துள்ளனர்.
துன்பம்நீக்கும் சுதந்திரப் பேரிகை என்று பாரதி பாடுகிறார்.

பெண் சிந்தனை:

இந்தியாவில், தேசிய விடுதலை இயக்கத்தில் பெண்கள் துணிந்து பங்கெடுத்த பின்னர் தான், தங்களுடைய சமூக கவுரவத்தை பற்றி ஆழமாகசிந்திக்கவே தொடங்கினர்.
ராஜாராம் மோகன்ராய் தொடங்கி காந்தி, அம்பேத்கர், மகாராஷ்டிராவின் புலே, கேரளாவில் நாராயணகுரு, ஆந்திரா வில் வீரசேசாங்க பந்தலு, பசுவய்யா, கர்நாடகத்தில் சித்தராமையா, தமிழகத்தின் ஈ.வெ.ராமசாமி, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.

'விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர்;விடுதலை என்பீர்; கருணை வெல்ல மென்பீர்; பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை” 

என பெண்ணுக்கு சுதந்திர வாழ்வு இல்லை என்றால் இந்த உலகில் மனிதனுக்கு வாழ்வில்லை என அன்றே பாரதி எச்சரித்துள்ளான். 

* வரலாற்று காலம் முதல் பெண்கள் போகபொருளாகவும்,அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் வாழப் பழக்கப்படுத்தப் பட்டனர்.

* இந்நிலையில் இருந்து, படிப்படியாக மீண்ட நிலையே இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக உள்ளது.

* 1789 ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடந்த, பிரெஞ்சு புரட்சியின்போது பாரிஸில் பெண்கள் போர்க் கொடி துாக்கினர். 'ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும்,' என குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.


பெண் உரிமை:

பணிக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, வாக்குரிமை, அடிமைகளாக நடத்தப்படுவதில் இருந்து பெண்களுக்கு விடுதலை போன்றவை முன் வைக்கப்பட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 


அவர்களை சமாதானம் செய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னர் வாக்குறுதி அளித்தார்.
வாக்குறுதியை நிறைவேற்றாமல் போகவே அவர் பதவி இழந்தார்.இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இக்கால கட்டத்தில் இத்தாலியிலும் தங்களுக்கு வாக்குரிமை கேட்டு பெண்கள் போராடினர்.

கிரிஸ் நாட்டின் விஸிஸ்ட்ரா என்பரின் தலைமையில் டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் பெண் பிரதிநிதிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்க தொடங்கியது.

முதல் பெண் வெற்றி : பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில்,
இரண்டாவது குடியரசை நிறுவிய லுாயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைகுழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தார்.
அந்த நாள் மார்ச் 8, 1848 ஆகும். உலக பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே 'மகளிர் தினமாக' அமைய அடிப்படை வித்தாக அமைந்தது.

இந்தியாவில் பெண்கள் :

இந்திய பெண்கள், திருமணம் ஆகும் வரை தந்தை சொல் கேட்கிறவளாகவும், திருமணத்திற்கு பின் கணவனுக்கு அடிமை யாகவும் கணவன் இறந்த பிறகு மூத்த மகனின் கட்டளைக்கு அடங்கி நடப்பவளாக பேதமைப்படுத்தப்பட்டு வருகிறாள்.

அனைத்து நாடுகளிலும் 'சராசரி பெண்' என்று அடையாளம் காண முடியும். ஆனால் இந்திய நாட்டில் மட்டும் தான் சராசரி பெண் என்று கோடிட்டு காட்ட முடியாது.

ஒரு நேர் கோட்டில் நாம் முன்னே இருக்கிறோம் என்பது தவறு, ஒரு வளையத்தில் நாம் எங்கோஇருக்கிறோம். எங்கே இருக்கிறோம் என்பதில் தான் நமது வாதம் முடிவாகாமல் இருக்கிறது. மாற வேண்டும்

இரண்டாம் நிலை : நமது சமுதாய கட்டமைப்பு பெண்களை இரண்டாம் நிலையில் தான் வைத்து உள்ளது. நாம் பெண் விடுதலை பற்றி என்னதான் பேசினாலும், பெண்கள் எல்லாத் துறைகளிலும் வளர்ந்து வந்தாலும், : நகர்ப்புற பெண்கள் சிந்தனையாலும், தொழிலாலும், பொருளாதாரத்தாலும் முன்னடைவு அடைந்திருந்தாலும், கிராமப்புற பெண்கள் இன்னும் நலிந்த நிலையில் தான் உள்ளனர்.

'கல்வியில்லா பெண்கள் களர்நிலம் கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி” 

என்ற பாரதிதாசனின் எண்ணத்திற்கேற்ப பெண்களுக்கு கல்வி, பேச்சு மற்றும் அடிப்படை உரிமைகள் என்று முழுமையாக கிடைக்க பெறுகிறதோ அன்று தான் நம்நாடு முன்னேற்ற பாதையில் வீறுநடை போடும்.
உறுதி ஏற்போம் .

விதைகளை காப்பாற்றி செடிகளை பிறப்பிக்கிற நிலம் தான் அடிக்கடி கொத்திக்கிளறப்படுகின்றன. 

அதுபோல் தான்  பெண்கள்அறியாமை என்ற இருளில் இருந்து விடுபட்டு கல்வியறிவு பெற்று, சுதந்திரம் அடைந்து,

 ஆண்களுக்கு நிகராக உரிமை பெறவும், பாலியல் கொடுமைகள் நீங்கி, பாரதி கண்ட புதுமை பெண்ணாக வாழ உறுதி ஏற்போம்!

Wednesday, August 14, 2019

அன்றும் இன்றும்

*அன்று
வீடு நிறைய குழந்தைகள்
*இன்று
வீட்டுக்கொரு குழந்தை
*அன்று
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
*இன்று
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்
*அன்று
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
*இன்று
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி
*அன்று
படித்தால் வேலை
*இன்று
படிப்பதே வேலை
*அன்று
வீடு நிறைய உறவுகள்
*இன்று
நிறைய வீடுகள் உறவுகள் இல்லை
*அன்று
உணவே மருந்து
இன்று
மருந்துகளே உணவு
*அன்று
முதுமையிலும் துள்ளல்
*இன்று
இளமையிலேயே அல்லல்
*அன்று
உதவிக்கு தொழில் நுட்பம்
*இன்று
தொழில் நுட்பம் தான் எல்லாம்
*அன்று
யோக வாழ்க்கை
*இன்று
எந்திர வாழ்க்கை
*அன்று
தியாகிகள் நாட்டை காப்பாற்றினர்
*இன்று
அரசியல்வாதிகள் நாட்டை விற்கின்றனர்
*அன்று
படங்களில் ஒரு குத்து பாட்டு
*இன்று
குத்து பாட்டில் தான் படமே
*அன்று
ஓடினோம் வயிற்றை நிறைக்க
*இன்று
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க
*அன்று
பெரியோர்கள் பாதையில்
*இன்று
இளைஞர்கள் போதையில்
*அன்று*  @
ஒரே புரட்சி
*இன்று* @
ஒரே வறட்சி
*அன்று* @
சென்றார்கள் வளர்ச்சியில்
*இன்று*
செல்கிறது சினிமா கவர்ச்சியில்
*அன்று* 
சட்டசபை
*இன்று*
சட்டை கிழியும் சபை
*அன்று*
மக்கள் நலன் ஆட்சி
*இன்று*
சிக்கல் தரும் ஆட்சி
*அன்று*
ஊரே கூட கோலாகல விழா
*இன்று*
ஊருக்கே போக முடியாத மூடுவிழா
*அன்று*
கைவீசி நடந்தோம்
*இன்று*
கைப்பேசியுடன் நடக்கிறோம்
*அன்று*
ஜனநாயகம்
*இன்று*
பணநாயகம்
*அன்று*
விளைச்சல் நிலம்
*இன்று*
விலை போன நிலம்
*அன்று*
தொட முடியாத உச்சத்தில் காதல்
*இன்று*
தொட்டு முடியும் எச்சம் காதல்
*அன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
*இன்று*
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.
*அன்று*
நிறைந்தது மகிழ்ச்சி
*இன்று*
நடக்குது வெற்று நிகழ்ச்சி
*அன்று*
வாழ்ந்தது  வாழ்க்கை
*இன்று*
ஏதோ வாழும் வாழ்க்கை.

Tuesday, August 6, 2019

தண்ணீர் பஞ்சம்

ஆத்தோரக்கிழவன்
அந்திசாயும் நேரம்
தண்ணீர் பாய்ந்த இடத்தில் கண்ணீரோடு .....

Saturday, June 15, 2019

படித்ததில் பிடித்தது.குமிழித் தூம்பு மதகு

குமிழித் தூம்பு மதகு என்பது தமிழ்நாட்டு ஏரிகளில் தேக்கிவைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது தேவையான அளவு மட்டும் தண்ணீரை வெளியேற்ற உதவ, ஒரு கல் பெட்டி போன்று அமைக்கப்பட்டு இருக்கும். இந்த கல்பெட்டி மேலே அரையடி விட்டத்தில் துளை இருக்கும். இந்த துளைக்குப் பெயர் நீரோடி ஆகும். இந்தத் துளையை குழவி போன்ற ஒரு கல் கொண்டு மூடி இருப்பார்கள். பெட்டியின் தரை மட்டத்திலும் சிறிய அளவிலான இரண்டு மூன்று துளைகள் இருக்கும் இவற்றை சேரோடி என்பர். ஏரியின் தரைமட்டத்திற்கு கீழே இந்த கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும்வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது துளையில் உள்ள குழவிக்கல்லை தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று எடுத்து விடுவர், அப்போது ஏரியின் நீரோடி துளை வழியாக 80 விழுக்காடு நீரும் சேரடி வழியாக 20 விழுக்காடு சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால் ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும்.[2] சில ஏரிகளில் இந்தத் தூம்பு மதகு உள்ள இடத்தை அடையாளம் காட்டும்விதமாக கல் மண்டபங்கள் அமைத்திருப்பர்.

குமிழித்தூம்பு

தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு !

தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.

மதகை அடைத்துள்ள மூடுகல்லை பிணைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும்.அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும்.தூர்வாரும் வேலை குறைந்துவிடும்..சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

*ஆறகழூர் பொன்.வெங்கடேசன்*

Tuesday, May 7, 2019

அறிவோம்

🚩

கோவிலில் வழிபடும் முறைகள்🔯*

⚜குளித்து, சுத்தமாக கோவிலுக்கு செல்ல வேண்டும்.

⚜ கோவிலில் உள்ள குளத்தில், அல்லது அங்குள்ள தண்ணீர் குழாயில், கைகால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லவும்,

⚜ கோவிலிற்கு வெறுங்கையுடன் செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ ஆகியவற்றை வாங்கி செல்ல வேண்டும்.

⚜முதலில் கோபுரத்தை வணங்கிவிட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்,

⚜ வணங்கும் போது (உள்ளங்கை கூடு) கோபுர கலசம் போல் இருக்க வேண்டும்.

⚜ இறைவனை தரிசனம் செய்துவிட்டு முன்னோக்கி செல்ல கூடாது,

பின்னோக்கி வந்து திரும்ப வரவேண்டும்,

முதுகுப்புறம் இறைவனுக்கு காண்பித்து வரக்கூடாது,

⚜ கொடிமரம் பலிபீடம் நமஸ்கரிக்க வேண்டும்,

⚜ சிவன் கோயில் என்றால் விநாயகரை முதலில் வணங்க வேண்டும்,

⚜ பெருமாள் கோயில் என்றால், கருடாழ்வாரையும் முதலில் வணங்க வேண்டும்,

⚜ கோவில் பிரகாரத்தை வலம் வர வேண்டும்,

⚜ கோவில் படியை தொட்டு நெற்றி புருவத்தில் மோதிரவிரலால் சற்று அழுத்த வேண்டும்,
படியை
தாண்டி செல்ல வேண்டும்,

⚜இறைவனுக்கு முன்னால் இருபுறமும் இருக்கக்கூடிய துவாரபாலகர் களிடம்  அனுமதி பெற வேண்டும்,

⚜ சிவன் கோயில் என்றால்

சிவனை முதலில் தரிசிக்க வேண்டும்

பின்னர் அம்பாளை தரிசிக்க வேண்டும்,

⚜ பெருமாள் கோயில் என்றால்

தாயாரை முதலில் சேவிக்க வேண்டும்,

பின்னர் பெருமாளை சேவிக்க வேண்டும்,

⚜சிவன் கோவில் என்றால் வில்வத்தாலும்,

⚜பெருமாள் கோவில் என்றால் துளசியாலும்

அர்ச்சனை செய்ய வேண்டும்.

⚜ சிவன் கோயில் என்றால் தீபாராதனையை கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும்

⚜ பெருமாள் கோவில் என்றால் தீபாராதனையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

⚜தீபாராதனையின் போது கண்களை நன்றாக திறந்து இறைவனை நன்றாக தரிசனம் செய்ய வேண்டும்,
கண்களை மூடிக்கொள்ள கூடாது.

⚜ கோவிலில் உள்ள எந்த சாமி சிலைகளையும் தொட்டு வணங்குதல் கூடாது,

⚜ கொடிமரத்திற்கு முன்னால் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்

⚜இறைவனுக்கு முன்னால் எதிரெதிரே நின்று தரிசிக்கக் கூடாது

⚜இறைவனுடைய கடைக்கண் பார்வை குளிர்ச்சியான பார்வையே நன்மை ,

⚜விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, 3 தோப்புக்கரணம் போட வேண்டும்.

⚜விநாயகரை ஒரு முறையும்,

⚜சூரியனை 2 முறையும்,

⚜ அம்பாளையும், விஷ்ணுவையும் 4 முறையும்,

⚜ ஆஞ்சநேயரை 5 முறையும்,

🙏பிரதட்சணம் செய்ய வேண்டும்.

⚜மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது.

⚜ அபிஷேகத்தை கண்டால், அலங்காரமும் பார்க்க வேண்டும்.

⚜நமது வேண்டுதல்களை யெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும்.

⚜அதற்கு பிறகு வேறெந்த சன்னதியிலும் சிவன் நாமம்,

⚜நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது.

⚜ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது.

⚜ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும்.

⚜ சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.

⚜ கோவிலில் கொடுக்கக்கூடிய குங்குமம், விபூதி,
வலதுகை
மோதிரவிரலால் அணிந்துகொள்ள வேண்டும்,

⚜விபூதி குங்குமத்தை வலது கையில் வாங்கியதும், இடது கையில் மாற்றி திரும்ப அணியக்கூடாது,

கிழக்கு முகமாக நின்று
அல்லது வடக்கு முகமாக நின்று,
இட்டுகொள்ள வேண்டும்,

⚜ இறைவன் சன்னதிக்கு முன்னால்  அனுமதி கொடுத்தால்,
இறைவனை பற்றி பாடுவது மிகவும் சிறப்பு,

⚜ ஒருவர் இறைவனை தரிசனம் செய்யும்பொழுது குறுக்கே செல்லுதல் கூடாது,
இடையூறாக இருக்கவும் கூடாது,

⚜இறைவனின் முன் காயத்திரி மந்திரம் சொல்வது மிகவும் சிறப்பு,

⚜ கோவிலில் கொடுக்கக்கூடிய விபூதி , குங்குமத்தை, தூய்மையான எதுவும் எழுதாத வெள்ளை பேப்பரில் மடித்து வைத்துக் கொள்வது சிறப்பு,

⚜நியூஸ் பேப்பர் மற்ற தேவையற்ற செய்திகள் உள்ள பேப்பரில் விபூதி குங்குமம் மடித்து வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது,

⚜ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையை போடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

⚜கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.

⚜சண்டிகேஸ்வரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடக்கூடாது.

⚜சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேஸ்வரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

⚜சிவன் கோவிலில் காலபைரவரையும்,

⚜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அணுகாது.

⚜ சிவன் கோயிலில் கொடிமரத்து முன் விழுந்து கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து பின்னர் வீட்டிற்கு செல்ல வேண்டும்,

⚜ பெருமாள் கோயிலில் கொடிமரத்து முன் விழுந்து கும்பிட்டு விட்டு நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும், உட்காரக்கூடாது,

⚜கோவிலுக்கு சென்றுவிட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும்,

⚜ இப்படியெல்லாம் கடவுளை அனுஷ்டித்தால்,

⚜ குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

🕉🕉