Tuesday, May 7, 2019

அறிவோம்

🚩

கோவிலில் வழிபடும் முறைகள்🔯*

⚜குளித்து, சுத்தமாக கோவிலுக்கு செல்ல வேண்டும்.

⚜ கோவிலில் உள்ள குளத்தில், அல்லது அங்குள்ள தண்ணீர் குழாயில், கைகால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லவும்,

⚜ கோவிலிற்கு வெறுங்கையுடன் செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ ஆகியவற்றை வாங்கி செல்ல வேண்டும்.

⚜முதலில் கோபுரத்தை வணங்கிவிட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்,

⚜ வணங்கும் போது (உள்ளங்கை கூடு) கோபுர கலசம் போல் இருக்க வேண்டும்.

⚜ இறைவனை தரிசனம் செய்துவிட்டு முன்னோக்கி செல்ல கூடாது,

பின்னோக்கி வந்து திரும்ப வரவேண்டும்,

முதுகுப்புறம் இறைவனுக்கு காண்பித்து வரக்கூடாது,

⚜ கொடிமரம் பலிபீடம் நமஸ்கரிக்க வேண்டும்,

⚜ சிவன் கோயில் என்றால் விநாயகரை முதலில் வணங்க வேண்டும்,

⚜ பெருமாள் கோயில் என்றால், கருடாழ்வாரையும் முதலில் வணங்க வேண்டும்,

⚜ கோவில் பிரகாரத்தை வலம் வர வேண்டும்,

⚜ கோவில் படியை தொட்டு நெற்றி புருவத்தில் மோதிரவிரலால் சற்று அழுத்த வேண்டும்,
படியை
தாண்டி செல்ல வேண்டும்,

⚜இறைவனுக்கு முன்னால் இருபுறமும் இருக்கக்கூடிய துவாரபாலகர் களிடம்  அனுமதி பெற வேண்டும்,

⚜ சிவன் கோயில் என்றால்

சிவனை முதலில் தரிசிக்க வேண்டும்

பின்னர் அம்பாளை தரிசிக்க வேண்டும்,

⚜ பெருமாள் கோயில் என்றால்

தாயாரை முதலில் சேவிக்க வேண்டும்,

பின்னர் பெருமாளை சேவிக்க வேண்டும்,

⚜சிவன் கோவில் என்றால் வில்வத்தாலும்,

⚜பெருமாள் கோவில் என்றால் துளசியாலும்

அர்ச்சனை செய்ய வேண்டும்.

⚜ சிவன் கோயில் என்றால் தீபாராதனையை கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும்

⚜ பெருமாள் கோவில் என்றால் தீபாராதனையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

⚜தீபாராதனையின் போது கண்களை நன்றாக திறந்து இறைவனை நன்றாக தரிசனம் செய்ய வேண்டும்,
கண்களை மூடிக்கொள்ள கூடாது.

⚜ கோவிலில் உள்ள எந்த சாமி சிலைகளையும் தொட்டு வணங்குதல் கூடாது,

⚜ கொடிமரத்திற்கு முன்னால் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி தரிசனம் செய்ய வேண்டும்

⚜இறைவனுக்கு முன்னால் எதிரெதிரே நின்று தரிசிக்கக் கூடாது

⚜இறைவனுடைய கடைக்கண் பார்வை குளிர்ச்சியான பார்வையே நன்மை ,

⚜விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, 3 தோப்புக்கரணம் போட வேண்டும்.

⚜விநாயகரை ஒரு முறையும்,

⚜சூரியனை 2 முறையும்,

⚜ அம்பாளையும், விஷ்ணுவையும் 4 முறையும்,

⚜ ஆஞ்சநேயரை 5 முறையும்,

🙏பிரதட்சணம் செய்ய வேண்டும்.

⚜மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது.

⚜ அபிஷேகத்தை கண்டால், அலங்காரமும் பார்க்க வேண்டும்.

⚜நமது வேண்டுதல்களை யெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும்.

⚜அதற்கு பிறகு வேறெந்த சன்னதியிலும் சிவன் நாமம்,

⚜நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது.

⚜ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது.

⚜ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும்.

⚜ சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.

⚜ கோவிலில் கொடுக்கக்கூடிய குங்குமம், விபூதி,
வலதுகை
மோதிரவிரலால் அணிந்துகொள்ள வேண்டும்,

⚜விபூதி குங்குமத்தை வலது கையில் வாங்கியதும், இடது கையில் மாற்றி திரும்ப அணியக்கூடாது,

கிழக்கு முகமாக நின்று
அல்லது வடக்கு முகமாக நின்று,
இட்டுகொள்ள வேண்டும்,

⚜ இறைவன் சன்னதிக்கு முன்னால்  அனுமதி கொடுத்தால்,
இறைவனை பற்றி பாடுவது மிகவும் சிறப்பு,

⚜ ஒருவர் இறைவனை தரிசனம் செய்யும்பொழுது குறுக்கே செல்லுதல் கூடாது,
இடையூறாக இருக்கவும் கூடாது,

⚜இறைவனின் முன் காயத்திரி மந்திரம் சொல்வது மிகவும் சிறப்பு,

⚜ கோவிலில் கொடுக்கக்கூடிய விபூதி , குங்குமத்தை, தூய்மையான எதுவும் எழுதாத வெள்ளை பேப்பரில் மடித்து வைத்துக் கொள்வது சிறப்பு,

⚜நியூஸ் பேப்பர் மற்ற தேவையற்ற செய்திகள் உள்ள பேப்பரில் விபூதி குங்குமம் மடித்து வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது,

⚜ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையை போடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

⚜கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.

⚜சண்டிகேஸ்வரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடக்கூடாது.

⚜சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேஸ்வரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

⚜சிவன் கோவிலில் காலபைரவரையும்,

⚜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அணுகாது.

⚜ சிவன் கோயிலில் கொடிமரத்து முன் விழுந்து கும்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமர்ந்து பின்னர் வீட்டிற்கு செல்ல வேண்டும்,

⚜ பெருமாள் கோயிலில் கொடிமரத்து முன் விழுந்து கும்பிட்டு விட்டு நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும், உட்காரக்கூடாது,

⚜கோவிலுக்கு சென்றுவிட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும்,

⚜ இப்படியெல்லாம் கடவுளை அனுஷ்டித்தால்,

⚜ குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

🕉🕉