Tuesday, August 14, 2012

சுதந்திர காற்று எங்கே?


சுதந்திரம் பெயருக்கு மட்டும் தான்
வறுமையின் மனம் இன்னும் வாடிக்கொண்டிருக்கையில்
வளர்ந்துவிட்டோம் என்று சொல்வதில் நியாயம் என்ன?
எங்கே எதில் வளர்ந்தோம்
அறிவியல் வளர்ச்சி மேலோங்க மேலோங்க ...
மனித வளர்ச்சி இன்று மண்மூடிக் கொண்டிருப்பதை
அறிந்தும் அறியாமல் உலக அரங்கில் நடைபோட்டுக்கொண்டிருக்கின்றோம்......ஆக நாம்
சிந்திக்கவும் செயல்படுத்தவும் முன் வந்தோம் என்றால்
சுதந்திரம் உயிர் பெறும்.
அப்போது தான் _ இவர்களின்
புலம்பலுக்கு புது வழி கிடைக்கும்.
அறிவு வளர்ச்சி ......
1.மரம்(மனம்) அழிவதால்
 குருவி(மனிதன்) புலம்பல்
கூடுகட்ட (வாழ்க்கை) இடமில்லையே .......