Friday, October 28, 2011

கடவுள் படைத்த கடைசி பிறவி


அறிவுக்கு வளர்ச்சியையும்
ஆற்றலுக்குஉணர்ச்சியையும்
கடவுள் படைத்த கடைசி பிறவி
இன்பத்துக்கு இணைப்பை ஊட்டும்
ஈகை குணம் கொண்ட பிறவி
உறவுகளை இணைக்கும் மேம்பாடும்
ஊரார்களின் உன்னத பண்பாடும்
எண்ணங்களை உரமாக்கும் நாகரிகமும்
ஏறுமுகமாய் வாழும் ஆறாம் அறிவு -நம்மையாளும் அறிவு
ஐம்பூதங்களின் இயற்கை பிறவி
பகத்துண்டு வாழும் பாரம்பரியமும்
வந்தாரை வரவேற்கும் விருந்தோம்பலும் கொண்ட பிறவி
ஒற்றுமையை விதையாக்கி
உறவுகளை உரிமையாக்கி
உள்ளுயிரை உரமாக்கும்
 உண்மை பிறவி
 உயிருள்ள பிறவி
கடவுள் படைத்த கடைசி பிறவி
கருணையுள்ளம் கொண்ட பிறவி
கடவுள் படைத்த கடைசி பிறவிமனிதப்பிறவி எல்லா உயிரினமும்
மதிக்கும் பிறவி





5 கருத்துரைகள்:

சி.பி.செந்தில்குமார் said...

கடவுள் படைத்த கடைசி பிறவிமனிதப்பிறவி எல்லா உயிரினமும்
மதிக்கும் பிறவி
>>
சிந்திக்க வேண்டிய வரிகள்

முனைவர் இரா.குணசீலன் said...

பிறவிப் பயன் அடைந்துவிட்டீர்கள் மணி.

சாகம்பரி said...

அருமை. நிறைய எழுதுங்கள்.

rajamelaiyur said...

அருமையான கவிதை

Sivamjothi said...

வினையறுக்க வந்ததே இப்பிறவி -- வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம்.
நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும்.
http://sagakalvi.blogspot.com/2012/04/blog-post_03.html

Post a Comment