Thursday, August 15, 2019

மனுசங்கடா நாங்க மனுசங்கடா இன்குலாப்

                                                                 சிவப்பு 
         பலருக்கும் உதட்டுச் சாயம்






.                                                                                                                                                             

 இன்குலாபிற்கோ காயத்திலிருந்து வடிகிற ரத்தம்” என்னும் கவிக்கோவின் கூற்றிற்கேற்ப மக்கள் கவிஞர்  இன்குலாப் விருதுகளால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்.

காவல்துறையின் இரவு நேரத்து அழைப்புகளும், விசாரணைகளும், சிறைகளுமே அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் எனச் சொல்லலாம்
.
எவ்வகையான சாதி, மத வட்டத்திற்குள்ளும் தன்னை அடையாளப்படுத்தாமல் மக்கள் மனங்களில் நிறைந்த, பாவலர் 

இன்குலாபின் நேர்காணல்கள் “மானுடக் குரல் - இன்குலாப் நேர்காணல்கள்” என்னும் பெயரில் தமிழ் அலை பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு கால கட்டங்களில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பாக இது அமைந்துள்ளது.


நேர்காணல்களுக்குள் நுழையுமுன் கவிஞரது கவிதை வரிகள் சிலவற்றை மீளவும் நினைவு கொள்ளல் பொருத்தமானது என்பதால், சில கவிதைகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன

எல்லா ஆரம்பக் காலக் கவிஞர்களும் தங்கள் கவிதைக்கான உந்துதலைத் திரைப்படப் பாடல் மெட்டுகளிலும், நாட்டுப்புறப் பாடல்களின் ஈடுபாட்டிலும் பெறுவார்கள். 

அதைப் போன்று கவிஞர் இன்குலாப் தன்னுடைய கவிதை 

இலக்கியத்தின் பிரவேசம் முதலில் பாடல்களாக அரும்பிப் பின்னர்,

     புதுக்கவிதையாகப் பரிணமித்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடைய கல்லூரிப் படிப்பின் போது, அறிமுகமான மீரா - இராசேந்திரன்(வகுப்பாசிரியர்), பிரேம்சந்திரன் (ஆங்கிலப் பேராசிரியர்) சுப்பையா என நீளும் ஆசிரியர்களின் மூலமாகத் தமிழுணர்வும், இயக்கச் சிந்தனையும் கொண்டவராகத் தன்னை மெருகேற்றிக் கொண்டதை நினைவு கூர்கிறார்.

தொடக்கக் காலத்தில் தி.மு.க.வின் ஆதரவாளராக இருந்தவர் கவிஞர் இன்குலாப். 1968இல் நடந்த வெண்மணிச் சம்பவம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதைப் பதிவு செய்துள்ளார். அந்நிகழ்வைக் குறிப்பிடுகையில், “உழைக்கின்ற தொழிலாளி வகுப்பினர் மீது, உழவுத் தொழிலாளியினர் மீது தொடுக்கப்பட்ட கோரமான, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்” (ப.44) என்று கூறியிருக்கிறார்.


         அதன் பின்னர் 69களில் நக்சல்பாரி இயக்கங்களுடன் கொண்டிருந்த தொடர்பு பொதுவுடைமை இலக்கியங்களை ஆர்வமுடன் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
சோஷலிசமும், கம்யூனிசமும் பேசியவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு அவர்களோடு தொடர்பு கொண்டார். புரட்சிகர அமைப்பில் இணைத்துக் கொண்டு, இலக்கியப் பணிகள் ஆற்றியவண்ணம், இன்னும் சொல்லப்போனால் தலைமறைவு வாழ்க்கையையும் கொஞ்ச காலம் வாழ்ந்தவர்.

அவசர கால நிலை 1975இல் பிறப்பிக்கப்பட்டபோது, ‘மனிதன்’ இதழில் வெளிவந்த பல்வேறு கவிதைகளும் அதற்காக அன்றைய நாளில் காவல்துறை தேடியலைந்ததும் தனிக்கதையாக இந்நேர்காணல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
தற்காலத்தில் தலித் இலக்கியங்கள், பெண்ணிய மொழி ஆகியனவற்றின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது.


              இது குறித்து வினா முன்வைக்கப்படுகையில், மொழி என்பது சிந்தனையை வெளிப்படுத்தும் முறை.
சிந்தனை விடுதலையை அவாவி நிற்கையில் மொழியின் மீது விதிக்கப்பட்டுள்ள மரபு ரீதியான கட்டுப்பாடுகளை மீறுதல் தவிர்க்க முடியாது. இதைக் காண்பவர்கள் தான் அதிர்ச்சியடைகின்றனர்.


மொழி என்பது உயர் மக்களுடைய பண்பாட்டுத் தளத்தில்தான் இயங்கி வருகின்றது. ஆகவே, அத்தகைய பண்பாட்டுத் தளத்தை நாடாமல், தனித்த தொரு விடுதலையை நோக்கிய நகர்வாக தலித், பெண்ணிம் சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.


             மதம், சாதி, அரசியல் முதலானவற்றின் அதிகாரம் குறித்துக் கேள்வி எழுப்புகையில் தெரியக்கூடிய நியாயம், அந்த நியாயங்களுக்குத் தடையாக அதிகாரம் நிற்கையில் அதை உடைத்துவிட்டுத் தாண்டிச் செல்ல வேண்டும் என்னும் நினைப்பே தன் கவிதையில் பாடுபொருளாக இருப்பதை உணர்த்துகிறார்.


               கவிதைகள் மட்டுமின்றி, சிறுகதை, கட்டுரை, நாடகம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிய இன்குலாபின் நாடகங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நீண்ட நெடிய போராட்ட வரலாறே ஆகும்.

               “வரலாற்றை ஒரு திறனாய்வு அடிப்படையில் பொற்கால மாயைக்கு இடம் கொடுக்காத வகையில், மன்னனுக்குரிய புகழ்பாடாமை,
போராட்டத்தையும் அழகியலையும் இணைக்கும் முயற்சி குறித்துக் கவிஞரின் நேர்காணலொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


              ‘அழகியல் என்பது ஓர் உயிர் இயல்பு. நான் இயற்கையைப் பார்க்கிறேன். என் படைப் புகளில் அதைக் கொண்டு வர முயற்சிக்கிறேன்’ என்று கூறும் கவிஞர் இன்குலாப் போராட்டத்தைப் பற்றி எழுதுவதும்,

அழகியல் மறுக்கப்பட்ட நிலையில் வெவ் வேறு விதங்களில் அதனை மீட்டெடுப்பதற்கான கோரிக்கைதான் என்பார். (பக்.125)
போராட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த ஓர் அனுபவமிக்க கவிஞரின் வாழ்வியலைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்நூல் அமைகிறது-.


சதையும் எலும்பும் நீங்க வச்சதீயில் வேகுதே-ஒங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே
எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க
எரியும்போது எவன் மசுரைப் புடுங்கப் போனீங்க?
மனுசங்கடா..நாங்க-மனுசங்கடா


என இன்னும் பல கவிதைகளில் அணையா நெருப்பாக வெண்மணி அவருடைய வரிகளில் எரிந்து கொண்டே இருக்கிறது.மனுசங்கடா பாடலை கே.ஏ.குணசேகரன் மெட்டமைத்து முதன் முதலாக தமுஎசவின் மேடைகளில் பாடிய போது காற்று வெளியெங்கும் தீப்பற்றக்கண்டோம்.


வெண்மணியின் வரலாற்றை இந்த நாலு வரிகளுக்குள் துடிப்போடும் உயிர்ப்போடும் அதே நெருப்பின் வெக்கையோடும் சொல்ல முடிந்ததே .இந்த எழுத்தின் வலிமை கண்டு அன்று போலவே இக்கணத்திலும் நான் வியந்து நிற்கிறேன்.


எனக்குள் நெருப்பை மூட்டி என்னை இடது பக்கம் நின்று இயங்க வைத்த பல கவிதைகளை இன்குலாப் தந்து கொண்டிருந்தார்.கனவுகளின் இடத்தில் விஞ்ஞானத்தை வைத்த உங்களை ஒரு மனிதராகக் கண்டே மரியாதை செய்கிறோம் என்று கார்ல் மார்க்ஸ் பற்றி அவர் எழுதிய எழுச்சியூட்டிய ஒரு கவிதை,

நாடு நாடாக விரட்டப்பட்டீர்

ஊர் ஊராகத் துரத்தப்பட்டீர்
இன்று

ஒரு பகலைப்போல
வெளிப்படையாகவும்
ஒரு பூகம்பம்போலத்
தலைமறைவாகவும்
நீங்கள் நடந்து செல்லாத
நாடேது?
ஊரேது?

அவர் எழுதிப் பரபரப்பையும் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்த கவிதைகள் என கண்மணி ராஜம் ,ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலம், ஸ்ரீராஜராஜேச்சுவரியம் போன்ற கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்

     .இன்று மீண்டும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை திமுக ஆட்சி கொண்டாடியபோது இன்குலாபின் ஸ்ரீராஜராஜேச்சுவரியம் கவிதையின் வரிகளைத்தான் தமுஎகசவின் பல மேடைகளில் முழங்கினோம்:


ஆயிரம் ஆண்டு மூத்த என் தங்கையின்
காலில் கட்டிய சதங்கை
இந்தப் பெரிய கோயில் முற்றத்தில்
அழுது கொண்டிருக்கிறது
இன்னும்
இதனுடைய ஒவ்வொரு கல்லிலும்
என் சகோதரன் தசைகள்
பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.
வல்லாங்கு செய்யப்பட்டுப் பிறந்து கொண்டிருக்கும்
நான்
கூசி நிற்கிறேன்.

இந்தக் கவிதைகளும் யுகப்பிரளயம்,பிரமிடுகள் போன்ற நெடுங்கவிதைகளும் இன்று வாசிக்கையில் ஆயாசம் தந்தாலும் அன்று இளம் பருவத்தில் எமக்குக் கல்வி புகட்டிய கவிதைகளாக விளங்கின.கல்வி பற்றி அவர் எழுதிய வரிகள் இன்றைக்கும் எத்தனை பொருத்தப்பாடுடையவையாகத் திகழ்கின்றன:

தாமரைப் பீடத்தில்

இருந்த சரசுவதியை

நிலப்பிரபுத்துவம்

எழுப்பிக்கொண்டுபோய்

ஏகாதிபத்தியத்தின்

மடியில் அமர்த்தியது.

கலைமகள் பின்பு
கவுன் மாட்டிக்கொண்டாள்

வீணையிலிருந்து
இங்கிலீஷ் ம்யூசிக்.
தொழிற்சங்கங்களின் தேவை,
பணி பற்றிய நக்சல் பார்வை 

கொண்ட அவருடைய கவிதை வரிகள் அப்போதும் எனக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை.இப்போதும் ஏற்க முடியவில்லை.

புரட்சி ஓங்குக                                                                                                                                                                   
என்ற இடிகளின் முழக்கத்தை
ஒலிக்க வேண்டிய உனது பேரிகை
“ கூலி உயர்வு

போனஸ்”

என்று கொசுக்களைப் போலவா
முணங்கித் திரிவது?

வர்க்கபோதம் அல்லது வர்க்க உனர்வு என்பது தானே தொழிலாளி வர்க்கத்துக்கு வந்து சேராது.அது தொழிற்சங்கப் போராட்டங்களின் வழியே ஊட்டப்பட்டு உருவாக்கப்படுவதுதான்.லெனின் காட்டிய வழியும் அதுதான்.

தொழிற்சங்க இயக்கத்தின் மீது ஆரோக்கியமான விமர்சனம் வைக்கலாம்.ஆனால் கொசுவென்று பேசிக் கொச்சைப்படுத்தும் பார்வையை என்னால் ஏற்க இயலாது.

அதே போல பகத்சிங் சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசியதை நக்சல் பாதைதான் சரியானதென்று சிம்பாலிக்காக காட்டுவதாக எழுதப்பட்ட கவிதையும் நெருடா பற்றிய கவிதையில் சிலிப் புரட்சி  காரணம் அவர்கள் வாக்குச்சீட்டை நம்பி நக்சல் பாதையில் ஆயுதம் ஏந்திப் போகாததுதான் என்றெல்லாம் எழுதியிருப்பது

 வாசிக்கும்போதே ஓவராத்தான் எழுதிட்டார் தோழர் என்று நினைத்ததுண்டு.ஆனாலும் அது அவருடைய பாதை.

அவருடைய தேர்வு.அவருடைய சுதந்திரம்.நம் கருத்து நம்மோடு.அதற்காக அன்பே உருவான இனிய அம்மனிதரை நம்மால் கடந்து செல்ல முடியுமா என்ன?
என்பதை சிந்திப்போம்.

0 கருத்துரைகள்:

Post a Comment