Wednesday, November 10, 2010

சிதையா நெஞ்சு கொள்

சிதையா நெஞ்சு கொள்
"மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
"என்று
மனிதனுடைய உயரிய மாண்புகள் எல்லாம் இவ்வையகத்து வானில் வலம்பெற  வேண்டும் என எண்ணிய எண்ணங்களையெல்லாம் தம்முடைய கவி வன்மையில் காலத்தால் அழியாத முடியாத பெட்டகமாய் வையத்து மக்களுக்கு மனதில் உறுதி வேண்டுமென்று பாரதி கூறுகிறார்.

ஒரு மனிதன் பிறந்தான்-வாழ்ந்தான்,இறந்தான் என்று இல்லாது இவ்வுலகத்திற்கு அவனால் என்ன பயன் என்பதனை ஒவ்வொருவரும் எண்ண வேண்டும்.

சிதைவுறாத மனதினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
இதனைப் பெற்ற ஒவ்வொருவரும் வாழ்வினில் எவ்வாறு வலம்பெறுவது என்பது குறித்துச் சிந்தனை செய்து, சாதனைகளை அடைய சரித்திரங்கள் பல நிகழ்த்த வேண்டும்.
உலகமக்கள் போற்றுமாறு உயரிய பல தொண்டுகள்செய்திட நாளும் உழைத்திடுக.

'மனமென்னும் ஓடையில் நினைவெனும்
நீரைஓடவிடு! வாழ்க்கையெனும்
கரடுமுரடான பாதை -உன்
வாழ்விற்குவழி காட்டும்'


மனதில் நினைகக்கூடிய நினைவுகள் எல்லாம் உண்மைகள்ஆகி விடமுடியாது. நினைவுகளுக்கு உயிர் கொடுத்து தட்டியெழுப்பினால் மட்டுமே நினைவு உண்மையாகும்.
வாழ்க்கைக்கு வழி காட்டும்
.
அவ்வாழ்க்கை வளம் பெறுவதற்கு முயற்சியெனும் வேரை நிலை நாட்ட வெற்றியெனும்பூமகள் உன்னை விண்ணகத்தில்
இருந்து காற்றின் அலைபட்டு உன்னிடத்தில் பூமழையாக வருவாள்.ஆகையால் வாழ்க்கை வெற்றி பெற வேண்டுமேயானால் முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கு நினைவுகளைக் காற்று போல பயணிக்க விடாமல் உங்களுடைய கட்டுபாட்டுக்குள் வைத்து மனதை ஒருமுகப்படுத்தினால் மட்டுமே வாழ்கை வளமானதாக உருவாக்கமுடியும்.இல்லையெனில்,ந்த வாழ்க்கை சிதைந்துவிடும்என்பது மட்டும் நினைவுகளில் இருக்கட்டும்.

"காகித்த்தில் கப்பல் செய்து
கடல் நடுவே மிதக்க விட்டேன்
கடல்அலைபோல் -மன
அலையும்அலைகிறது".

கடலலைப் போல் மன அலையும்.
அலையும் எண்ணங்கள் பல திசைகளில் பயணிக்கும்
.
வெற்றியெனும்  பாதையை அடைய ஒரேதி வழிதான்.
அந்தப் பாதையை அடைய வேண்டுமேயானால் எண்ணமும் மனமும்அலைபோல் அலையாது பயணிக்க வேண்டும்.மனிதன்
ஆசைகளைத் துறந்து நம்பிக்கையெனும் வேரை நிலைநாட்ட பல மனிதர்கள் ஆசைகளைத் துறந்து தனக்கென்று வாழாது பிறருடைய நலனில் அக்கரை கொண்டு தன்னைத்தானே செதுக்கியப் பிறரை இச்சமூகத்திற்கு பெரும் பங்கு ஆற்ற வழிவகை செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் வாழ்ந்து
வருகின்றான்.இவர்களெல்லாம் தங்களுக்குள் அலைந்து கொண்டிருக்கும் ஒருமுகப்படுத்த அலையாத மனமாக மாற்றி வாழ்ந்து கொண்டு வருவார்கள். அதுபோல நாமும் வாழ்வினில்
வளம் பெற்று வாழ்வோம்.

"வாழ்க்கை வாழ்வதற்கே!
வயதுள்ள வரை வாழ்வோம்
வானுலகில் சாதனைகள்
பல புரிந்திடுவோம்
சரிந்திரங்கள் நிகழ்த்திடுவோம்"
என்ற உயர்ந்த எண்ணங்களை உறுதியான வாழ்வு கொண்டு உலகத்திற்குப்  பறைசாற்றிட ஒவ்வொரு மனிதனுடைய
வாழ்வு உறுதி என்ற பூட்டினை பூட்டி வாழ்க்கையெனும் வாசலுக்குச் சென்று வளம் பெற வாழ்வாங்கு வாழ வேண்டும்.ஆகவே, ஒரு மனிதனின் வாழ்வு உறுதியாக அமைந்துவிட்டால் உலகத்தினை வெற்றி பெறலாம்.
வாழ்கையானது அவரவர்களுடைய கையில் தான் உள்ளது.ஆகவே, முயற்சி எனும் கோலைப் பிடித்து வெற்றியெனும் கரையை அடைய வேண்டுமெனில், முயற்சி
அவசியமானது.அம்முயற்சியினை முயன்று ஒவ்வொருவரும்
பணியில் ஈடுபடுத்தினால் அப்பணியில் வெற்றியெனும் பூ பூத்துக் குலுங்கும். வாழ்க்கை இனிமையுறும்..ஆகவே, என் இனிய தமிழர்களே! முயற்சி செய்யுங்கள்.!
வெற்றி நிச்சயம்.முயற்சி செய்யவில்லையெனில்,தோல்வி
நிச்சயம்.ஒவ்வொரு மனிதனின் பணியிலும் அவனுடைய முயற்சிக்கு தகுந்த கூலி கிடைக்கும்.அது பொருளாகவோ ,புகழாகவோ எது வேண்டுமானாலும்இருக்கலாம்.
ஆனால் முயற்சி அவசியம்.மயற்சி செய்யுங்கள்.வெற்றி வாகை உங்களுக்கே!பயணம் தொடரட்டும்...
சிதைவுறாத மனதைப் பெற்று மனம் மகிழ்ச்சிதனில் திளைத்து,
எண்ணங்கள் உயர்வடைந்து, ஒருமித்தக் கருத்துடன் வாழ்ந்து
ஒற்றுமையுணர்வுடன் பழகி, ஓயாது தம் பணியில் சீரும் சிறப்புடனும் செம்மைபட  செந்நெல் போன்று செழித்தும் செழுமையுடன் வாழ்க! வளர்க!