Tuesday, February 28, 2012

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கல்விதந்தைக்கு பாமாலை

இதயமெனும் கோட்டையில்
அன்பெனும் மலர்சூடி
மனதில் இன்பத்தையளிக்கும்
ஞானதான வள்ளல் கே.எஸ்.ஆர் ஐயா புகழ்பாட-இந்த
வசந்த வேளையில் வாழ்த்து மாலை சூட
சொல்மாலையோடு
தமிழன்னை எம் நாவினில் தவழ்ந்து விளையாட
கல்வித்திருமகன் புகழ்பாட-
கே.எஸ்.ஆர் பல்கலைக் கழகம் உருவாக...
பாமாலை பொழியும் கவிமழை நேரம்
கல்விதந்தைக்கும்
அடியேனின் அன்பு வணக்கம்

அந்த நாள் முதல்
இந்த நாள் வரை
நம் கல்வித்தந்தை கே.எஸ்.ஆர் ஐயாவுக்கு
மறக்க முடியாத நாள்
இந்நாள்

தாயின் கருவறையிலிருந்து
பூமித்தாய் கருவறையின்
திருவறைக்கு வந்த
திருநாள்-இதை நாம்
மறத்தல் தகுமோ

கருவேப்பம் பட்டி கண்டெடுத்த  கல்விச் சிலை
சென்னிமலை பச்சியம்மாள் சேர்ந்து செதுக்கிய சிற்பம்
ஞாயிறுக்கும் வயதுண்டு நல்மதிக்கும் தேயுண்டு
மழைக்கும் மறைவுண்டு மாலைக்கும் இருட்டுண்டு
காற்றும் கரைகடக்கும் கடல்மணலும் கரைந்து போகும்
கண்ணீரில் உப்புண்டு கவின் மலரில் தேனுண்டு
காவியத்தில் கற்பனையுண்டு கைகளில் சக்கரமுண்டு

மறையாத ஞாயிறாய் தேயாத மதியாய்
திகட்டாத அமுதாய் கரையாத உருவாய்
பிறக்கும் போது குழந்தையாய்
வளரும் போது உழைப்பாளியாய்
இருமனம் இணையும் திருமணத்தின் போது கனியாய்
இன்று தாய்தந்தையாகிய தாயுமானவரே
நம்ம கே.எஸ்.ஆர் ஐயா அவர்கள்
கல்விக்கு கலங்கரை விளக்கமாய்
கலைமகளோடு கைகோர்த்து நிற்கின்றார்

திருச்செங்கோடு என்றால் அர்த்தநாரீ-அது அந்தக் காலம்
கே.எஸ்.ஆர் என்றால் திருச்செங்கோடு -இது இந்தக் காலம்
அன்று ஆவின் பாலை அமுதாய் ஊற்றினீர்-இன்று
ஞானப்பாலை அனைவருக்கும் புகட்டுகின்றீர்
வாங்கிய பட்டங்கள் வாசித்து மாலாது-நீங்கள்
வரலாறு பேசும் பெருங்காவியம்

நாளும் பொழுதும் நல்லதை எண்ணி வாழ்பவரே
நானிலம் செழிக்க  வந்த நல்முத்தே
நாடுபோற்றும் விலை மதிக்க முடியாத
எங்கள் கல்விதந்தை சொத்தே
கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பகக் கனியே
கை உயர்த்தி கேட்போர்க்கெல்லாம்
கரம் தாழ்த்தி கொடுக்கும் கருணைக்கடலே

தென்றலுங்கள் தேனிலவு காலங்களை வீணை மீட்டும்
பச்சை பசுஞ்சோலைகள்-உங்கள்
பார்வைக்கு தவம் கிடக்கும்
பைந்தமிழும் பசுமை பாடும்
பல்கலைக்கழகம் நீர்

கரும்பலகைக்கு கண்ணிருந்தால்-உம் காவியம் பாடும்
மேசைக்கு வாயிருந்தால் மெல்லிசை பாடும்
சாலையில் கற்கள் சங்கீத நடனமாடும்

அழியாத புகழ் உமக்குண்டு-நன்றி
மறவாத நல்லிதயமுண்டு
தாரத்தை புரிந்தீர்-அதனால்
இல்லறத்தில் நல்லறம் கண்டீர்

சோதனையும் வேதனையும் பல கண்டீர்
சாதனை பல நூறு கண்டீர்

கடல் கடந்து திரவியம்
தேடியது -அந்தக் காலம்
கடல் கடந்து கெளரவம்
வருகுது உங்களுக்கு இந்தக் காலம்
பாரில் வாழும் பல்லோரே
இதற்கு சாட்சி

 வாழ்க்கைத் துறையில் பிழைப்பதற்கு பல வழி-ஆனால்
உமக்கென்றும் தனி வழியே
கல்வித்துறை அமைத்தீர்
கலைவிருது பெற்றீர்
பண்பாளர் பல கொண்டீர்
பார் புகழும் வெற்றி கண்டீர்-இனி
கே.எஸ்.ஆர் பல்கலைக்கழகம் உயரக் காண்பீர்
சுயமரியாதை உமக்குண்டு

நீர் வாழ்ந்த காலத்தில் புகழுண்டு-இனி
வாழும் காலத்தில் புகழுண்டு நிலையுண்டு

அறிவுக்கு கே.எஸ்.ஆர்

கல்வித்திருக்கோயில்
 எழுதும் வரலாற்றில்
இவரொரு நீதிமான்

கலைவாணி அருளாலே
கே.எஸ்.ஆர்  ஐயாவுக்கு புகழ் வெற்றி கூடி வரும் இனி
ஞானதானவள்ளல் வாழிய வென்றடி வாழ்த்துவோம் வணங்குவோம்

கே.எஸ்.ஆர் கல்வி தந்தை

கே.எஸ்.ஆர்
இதயமெனும் கோட்டையில்
அன்பெனும் மலர்சூடி-மற்றவர்
மனதில் இன்பத்தையளிக்கும்
ஞானதான வள்ளல் கே.எஸ்.ஆர் ஐயா புகழ்பாட-இந்த
வசந்த வேளையில் வாழ்த்து மாலை சூட
சொல்மாலையோடு வந்திருக்கின்றோம்

தமிழன்னை எம் நாவினில் தவழ்ந்து விளையாட-இந்த
கல்வித்திருமகன் புகழ்பாட-
கே.எஸ்.ஆர் பல்கலைக் கழகம் உருவாக...
பாமாலை பொழியும் கவிமழை நேரம்
கல்விதந்தைக்கும் அனைவருக்கும்
அடியேனின் அன்பு வணக்கம்

அந்த நாள் முதல்
இந்த நாள் வரை
நம் கல்வித்தந்தை கே.எஸ்.ஆர் ஐயாவுக்கு
மறக்க முடியாத நாள்
இந்நாள்
தாயின் கருவறையிலிருந்து
பூமித்தாய் கருவறையின்
திருவறைக்கு வந்த
திருநாள்-இதை நாம்
மறத்தல் தகுமோ

கருவேப்பம் பட்டி கண்டெடுத்த  கல்விச் சிலை
சென்னிமலை பச்சியம்மாள் சேர்ந்து செதுக்கிய சிற்பம்
ஞாயிறுக்கும் வயதுண்டு நல்மதிக்கும் தேயுண்டு
மழைக்கும் மறைவுண்டு மாலைக்கும் இருட்டுண்டு
காற்றும் கரைகடக்கும் கடல்மணலும் கரைந்து போகும்
கண்ணீரில் உப்புண்டு கவின் மலரில் தேனுண்டு
காவியத்தில் கற்பனையுண்டு கைகளில் சக்கரமுண்டு

மறையாத ஞாயிறாய் தேயாத மதியாய்
திகட்டாத அமுதாய் கரையாத உருவாய்
பிறக்கும் போது குழந்தையாய்
வளரும் போது உழைப்பாளியாய்
இருமனம் இணையும் திருமணத்தின் போது கனியாய்
இன்று தாய்தந்தையாகிய தாயுமானவரே
நம்ம கே.எஸ்.ஆர் ஐயா அவர்கள்
கல்விக்கு கலங்கரை விளக்கமாய்
கலைமகளோடு கைகோர்த்து நிற்கின்றார்
திருச்செங்கோடு என்றால் அர்த்தநாரீ-அது அந்தக் காலம்
கே.எஸ்.ஆர் என்றால் திருச்செங்கோடு -இது இந்தக் காலம்

அன்று ஆவின் பாலை அமுதாய் ஊற்றினீர்-இன்று
ஞானப்பாலை அனைவருக்கும் புகட்டுகின்றீர்
வாங்கிய பட்டங்கள் வாசித்து மாலாது-நீங்கள்
வரலாறு பேசும் பெருங்காவியம்
நாளும் பொழுதும் நல்லதை எண்ணி வாழ்பவரே
நானிலம் செழிக்க  வந்த நல்முத்தே
நாடுபோற்றும் விலை மதிக்க முடியாத
எங்கள் கல்விதந்தை சொத்தே
கேட்டதையெல்லாம் கொடுக்கும் கற்பகக் கனியே

கை உயர்த்தி கேட்போர்க்கெல்லாம்
கரம் தாழ்த்தி கொடுக்கும் கருணைக்கடலே
தென்றலுங்கள் தேனிலவு காலங்களை வீணை மீட்டும்
பச்சை பசுஞ்சோலைகள்-உங்கள்
பார்வைக்கு தவம் கிடக்கும்
பைந்தமிழும் பசுமை பாடும்
பல்கலைக்கழகம் நீர்
கரும்பலகைக்கு கண்ணிருந்தால்-உம் காவியம் பாடும்
மேசைக்கு வாயிருந்தால் மெல்லிசை பாடும்
சாலையில் கற்கள் சங்கீத நடனமாடும்

அழியாத புகழ் உமக்குண்டு-நன்றி
மறவாத நல்லிதயமுண்டு
தாரத்தை புரிந்தீர்-அதனால்
இல்லறத்தில் நல்லறம் கண்டீர்
சோதனையும் வேதனையும் பல கண்டீர்
சாதனை பல நூறு கண்டீர்

கடல் கடந்து திரவியம்
தேடியது -அந்தக் காலம்
கடல் கடந்து கெளரவம்
வருகுது உங்களுக்கு இந்தக் காலம்
பாரில் வாழும் பல்லோரே
இதற்கு சாட்சி
 வாழ்க்கைத் துறையில் பிழைப்பதற்கு பல வழி-ஆனால்
உமக்கென்றும் தனி வழியே
கல்வித்துறை அமைத்தீர்
கலைவிருது பெற்றீர்
பண்பாளர் பல கொண்டீர்
பார் புகழும் வெற்றி கண்டீர்-இனி
கே.எஸ்.ஆர் பல்கலைக்கழகம் உயரக் காண்பீர்

சுயமரியாதை உமக்குண்டு
நீர் வாழ்ந்த காலத்தில் புகழுண்டு-இனி
வாழும் காலத்தில் புகழுண்டு நிலையுண்டு
ஆக்கத்திற்கு I.A.S
அதிகாரத்திற்கு I.P.S
அறிவுக்கு K.S.R
கல்வித்திருக்கோயில்
 எழுதும் வரலாற்றில்
இவரொரு நீதிமான்
கலைவாணி அருளாலே
கே.எஸ்.ஆர்  ஐயாவுக்கு புகழ் வெற்றி கூடி வரும் இனி
ஞானதானவள்ளல் வாழிய வென்றடி வாழ்த்துவோம்