அன்னை வழியிலே அனைவரும் நடக்க வேண்டும்
ஆன்றோர் சொல் படி கேட்க வேண்டும்
இன்முகத்தோடு அனைவரும் ஏற்க வேண்டும்
ஈன்ற நெஞ்சம் குளிர வேண்டும்
உண்மையாய் வாழ வேண்டும்
ஊர் புகழ வேண்டும்
எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும்
ஏன்? எதற்கு? என்ற கேள்வி எழ வேண்டும்
ஒரே வழி அது நல்வழி பின்பற்ற வேண்டும்
ஓதல் தான் சிறந்ததென நம்ப வேண்டும்
சமத்துவமே- நமது
தத்துவமென நிலை மாற வேண்டும்
சாக்கடை போல் ஓடாது
பூக்கடை போல் மணக்க வேண்டும்
சாதனைகள் பல புரிந்திட வேண்டும்-நம்
சோதனைகள் பல அகன்றிட வேண்டும்
சரித்திரத்தில் இடம் பெற வேண்டும்
தரித்திர பிசாசு நம்மை விட்டு அகழ வேண்டும்
வாழ்க்கை வாழ்வதற்கே !
வளம் பெறுவதற்கே!
வரலாறு படைப்போம்
புதிய எழுச்சியுடன் புறப்படுவோம்
புதிய நோக்கில்-நம் பயணம் பயணிக்கட்டும்.....
Saturday, January 1, 2011
புதிய எழுச்சி
இடுகையிட்டது
மதன்மணி
நேரம்
Saturday, January 01, 2011
0
கருத்துரைகள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Thursday, December 2, 2010
சிந்தியுங்கள் சாதனையை சந்தியுங்கள்
உண்மை பேச துடிக்கும்
மனித குலம்
உண்மை பேச என்றும்துணிவதில்லை-அதற்காக
அமைதியே என் வழியென்று
சொல்லிக்கொண்டு செல்லும்
மனிதகுலம்
இந்நிலையில் நம் வாழ்வு
எங்ஙனம் அமையும்.
நாளைய வருங்காலத்தை
வளமானதாக்கவும்,
நாளைய சமுதாயத்தை
ஒழுக்காக்கவும்,
சிந்தியுங்கள் சாதனையை சந்தியுங்கள்
இடுகையிட்டது
மதன்மணி
நேரம்
Thursday, December 02, 2010
0
கருத்துரைகள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Wednesday, December 1, 2010
வசந்த கால அலை
அழகானதொரு-அந்த
வசந்த காலத்திற்கு
கூட்டிச்செல்கிறது
அங்கே
கடல் அலையும்-என்
மன அலையும்
மாறி மாறி
பயணிக்கிறது...
கண் இமைகளை தடவிச் செல்கிறது.
இருவிழி திறக்கும் முன்
இதயத்தின் ஊற்று திறந்து
அது பிறந்து
வசந்த கால அலை வீச தொடங்கியது.
இடுகையிட்டது
மதன்மணி
நேரம்
Wednesday, December 01, 2010
0
கருத்துரைகள்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
லேபிள்கள்:
கவிதை


