Thursday, January 12, 2012

பார்வை

வலை நண்பர்களுக்கு வணக்கம்






பார்ப்பது என்பது
 கண்ணால் காண்பது மட்டுமல்ல

மனதால் நினைப்பதும் பார்வை
எழுத்தும் பார்க்கும் ஆற்றல் உண்டு

 ஆகவே எழுத்தில் உங்களை காண்கிறேன்

எழுத்து
 பேசும் பார்க்கும்
இவ்விரு செயல் நடைபெறக்கூடியது

எனவே இரண்டாயிரத்து பன்னிரெண்டில்
எழுத்தே முதன்மையானதாக  கொண்டு ஏற்றம் அடைவோம்

 என்று கூறி            அனைவருக்கும்

இனிய புத்தாண்டு

மற்றும்

உழவுத் திருநாள்

வாழ்த்துக்கள்.                                                                   

உங்களுடன்  
         மதன்மணி.....
நீண்ட இடைவெளிக்கு பிறகு. .....
தங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்வு அடைகின்றேன்

Thursday, November 17, 2011

எது இலக்கியம்


எது இலக்கியம்

மனதை தொட்டு மண்ணையும் விண்ணையும் தொடும் இலக்கியம்

இலக்கியமா!

ஆம் இலக்கியம் தான்.

எந்தவொரு எழுத்து

ஒரு மனிதனை மதிப்படையச் செய்யகின்றதோ
அது இலக்கியமாகி விடுகிறதா!
ஆம்

இலக்கை அடைவது இலக்கியம்  என்றால்
அதிலென்ன
சங்க இலக்கியம் வரை தற்கால இலக்கியம்
எந்தவொரு இலக்கியம்

ஒரு மனிதனின் வாழ்வில் இன்ப துன்பங்களை வெளிகாட்டுகின்றதோ

 அது அவரவருக்கு பிடித்த இலக்கியமாகி விடுகிறது.

இலக்கியம்  யாப்பு நடையில் தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது

இலக்கியம் பாமரனுக்கும் பயன் தர வகையில் அமைந்தால், அவ்விலக்கியெழுத்து மண்ணையும் தொடும்  விண்ணையும் தொடும்,

Friday, October 28, 2011

கடவுள் படைத்த கடைசி பிறவி


அறிவுக்கு வளர்ச்சியையும்
ஆற்றலுக்குஉணர்ச்சியையும்
கடவுள் படைத்த கடைசி பிறவி
இன்பத்துக்கு இணைப்பை ஊட்டும்
ஈகை குணம் கொண்ட பிறவி
உறவுகளை இணைக்கும் மேம்பாடும்
ஊரார்களின் உன்னத பண்பாடும்
எண்ணங்களை உரமாக்கும் நாகரிகமும்
ஏறுமுகமாய் வாழும் ஆறாம் அறிவு -நம்மையாளும் அறிவு
ஐம்பூதங்களின் இயற்கை பிறவி
பகத்துண்டு வாழும் பாரம்பரியமும்
வந்தாரை வரவேற்கும் விருந்தோம்பலும் கொண்ட பிறவி
ஒற்றுமையை விதையாக்கி
உறவுகளை உரிமையாக்கி
உள்ளுயிரை உரமாக்கும்
 உண்மை பிறவி
 உயிருள்ள பிறவி
கடவுள் படைத்த கடைசி பிறவி
கருணையுள்ளம் கொண்ட பிறவி
கடவுள் படைத்த கடைசி பிறவிமனிதப்பிறவி எல்லா உயிரினமும்
மதிக்கும் பிறவி