Thursday, August 15, 2019

மனுசங்கடா நாங்க மனுசங்கடா இன்குலாப்

                                                                 சிவப்பு 
         பலருக்கும் உதட்டுச் சாயம்






.                                                                                                                                                             

 இன்குலாபிற்கோ காயத்திலிருந்து வடிகிற ரத்தம்” என்னும் கவிக்கோவின் கூற்றிற்கேற்ப மக்கள் கவிஞர்  இன்குலாப் விருதுகளால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்.

காவல்துறையின் இரவு நேரத்து அழைப்புகளும், விசாரணைகளும், சிறைகளுமே அவருக்கு வழங்கப்பட்ட விருதுகள் எனச் சொல்லலாம்
.
எவ்வகையான சாதி, மத வட்டத்திற்குள்ளும் தன்னை அடையாளப்படுத்தாமல் மக்கள் மனங்களில் நிறைந்த, பாவலர் 

இன்குலாபின் நேர்காணல்கள் “மானுடக் குரல் - இன்குலாப் நேர்காணல்கள்” என்னும் பெயரில் தமிழ் அலை பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு கால கட்டங்களில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பாக இது அமைந்துள்ளது.


நேர்காணல்களுக்குள் நுழையுமுன் கவிஞரது கவிதை வரிகள் சிலவற்றை மீளவும் நினைவு கொள்ளல் பொருத்தமானது என்பதால், சில கவிதைகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன

எல்லா ஆரம்பக் காலக் கவிஞர்களும் தங்கள் கவிதைக்கான உந்துதலைத் திரைப்படப் பாடல் மெட்டுகளிலும், நாட்டுப்புறப் பாடல்களின் ஈடுபாட்டிலும் பெறுவார்கள். 

அதைப் போன்று கவிஞர் இன்குலாப் தன்னுடைய கவிதை 

இலக்கியத்தின் பிரவேசம் முதலில் பாடல்களாக அரும்பிப் பின்னர்,

     புதுக்கவிதையாகப் பரிணமித்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னுடைய கல்லூரிப் படிப்பின் போது, அறிமுகமான மீரா - இராசேந்திரன்(வகுப்பாசிரியர்), பிரேம்சந்திரன் (ஆங்கிலப் பேராசிரியர்) சுப்பையா என நீளும் ஆசிரியர்களின் மூலமாகத் தமிழுணர்வும், இயக்கச் சிந்தனையும் கொண்டவராகத் தன்னை மெருகேற்றிக் கொண்டதை நினைவு கூர்கிறார்.

தொடக்கக் காலத்தில் தி.மு.க.வின் ஆதரவாளராக இருந்தவர் கவிஞர் இன்குலாப். 1968இல் நடந்த வெண்மணிச் சம்பவம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதைப் பதிவு செய்துள்ளார். அந்நிகழ்வைக் குறிப்பிடுகையில், “உழைக்கின்ற தொழிலாளி வகுப்பினர் மீது, உழவுத் தொழிலாளியினர் மீது தொடுக்கப்பட்ட கோரமான, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்” (ப.44) என்று கூறியிருக்கிறார்.


         அதன் பின்னர் 69களில் நக்சல்பாரி இயக்கங்களுடன் கொண்டிருந்த தொடர்பு பொதுவுடைமை இலக்கியங்களை ஆர்வமுடன் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
சோஷலிசமும், கம்யூனிசமும் பேசியவர்களின் பேச்சில் ஈர்க்கப்பட்டு அவர்களோடு தொடர்பு கொண்டார். புரட்சிகர அமைப்பில் இணைத்துக் கொண்டு, இலக்கியப் பணிகள் ஆற்றியவண்ணம், இன்னும் சொல்லப்போனால் தலைமறைவு வாழ்க்கையையும் கொஞ்ச காலம் வாழ்ந்தவர்.

அவசர கால நிலை 1975இல் பிறப்பிக்கப்பட்டபோது, ‘மனிதன்’ இதழில் வெளிவந்த பல்வேறு கவிதைகளும் அதற்காக அன்றைய நாளில் காவல்துறை தேடியலைந்ததும் தனிக்கதையாக இந்நேர்காணல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
தற்காலத்தில் தலித் இலக்கியங்கள், பெண்ணிய மொழி ஆகியனவற்றின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது.


              இது குறித்து வினா முன்வைக்கப்படுகையில், மொழி என்பது சிந்தனையை வெளிப்படுத்தும் முறை.
சிந்தனை விடுதலையை அவாவி நிற்கையில் மொழியின் மீது விதிக்கப்பட்டுள்ள மரபு ரீதியான கட்டுப்பாடுகளை மீறுதல் தவிர்க்க முடியாது. இதைக் காண்பவர்கள் தான் அதிர்ச்சியடைகின்றனர்.


மொழி என்பது உயர் மக்களுடைய பண்பாட்டுத் தளத்தில்தான் இயங்கி வருகின்றது. ஆகவே, அத்தகைய பண்பாட்டுத் தளத்தை நாடாமல், தனித்த தொரு விடுதலையை நோக்கிய நகர்வாக தலித், பெண்ணிம் சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.


             மதம், சாதி, அரசியல் முதலானவற்றின் அதிகாரம் குறித்துக் கேள்வி எழுப்புகையில் தெரியக்கூடிய நியாயம், அந்த நியாயங்களுக்குத் தடையாக அதிகாரம் நிற்கையில் அதை உடைத்துவிட்டுத் தாண்டிச் செல்ல வேண்டும் என்னும் நினைப்பே தன் கவிதையில் பாடுபொருளாக இருப்பதை உணர்த்துகிறார்.


               கவிதைகள் மட்டுமின்றி, சிறுகதை, கட்டுரை, நாடகம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிய இன்குலாபின் நாடகங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நீண்ட நெடிய போராட்ட வரலாறே ஆகும்.

               “வரலாற்றை ஒரு திறனாய்வு அடிப்படையில் பொற்கால மாயைக்கு இடம் கொடுக்காத வகையில், மன்னனுக்குரிய புகழ்பாடாமை,
போராட்டத்தையும் அழகியலையும் இணைக்கும் முயற்சி குறித்துக் கவிஞரின் நேர்காணலொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


              ‘அழகியல் என்பது ஓர் உயிர் இயல்பு. நான் இயற்கையைப் பார்க்கிறேன். என் படைப் புகளில் அதைக் கொண்டு வர முயற்சிக்கிறேன்’ என்று கூறும் கவிஞர் இன்குலாப் போராட்டத்தைப் பற்றி எழுதுவதும்,

அழகியல் மறுக்கப்பட்ட நிலையில் வெவ் வேறு விதங்களில் அதனை மீட்டெடுப்பதற்கான கோரிக்கைதான் என்பார். (பக்.125)
போராட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த ஓர் அனுபவமிக்க கவிஞரின் வாழ்வியலைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்நூல் அமைகிறது-.


சதையும் எலும்பும் நீங்க வச்சதீயில் வேகுதே-ஒங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெ ஊத்துதே
எதையெதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க-நாங்க
எரியும்போது எவன் மசுரைப் புடுங்கப் போனீங்க?
மனுசங்கடா..நாங்க-மனுசங்கடா


என இன்னும் பல கவிதைகளில் அணையா நெருப்பாக வெண்மணி அவருடைய வரிகளில் எரிந்து கொண்டே இருக்கிறது.மனுசங்கடா பாடலை கே.ஏ.குணசேகரன் மெட்டமைத்து முதன் முதலாக தமுஎசவின் மேடைகளில் பாடிய போது காற்று வெளியெங்கும் தீப்பற்றக்கண்டோம்.


வெண்மணியின் வரலாற்றை இந்த நாலு வரிகளுக்குள் துடிப்போடும் உயிர்ப்போடும் அதே நெருப்பின் வெக்கையோடும் சொல்ல முடிந்ததே .இந்த எழுத்தின் வலிமை கண்டு அன்று போலவே இக்கணத்திலும் நான் வியந்து நிற்கிறேன்.


எனக்குள் நெருப்பை மூட்டி என்னை இடது பக்கம் நின்று இயங்க வைத்த பல கவிதைகளை இன்குலாப் தந்து கொண்டிருந்தார்.கனவுகளின் இடத்தில் விஞ்ஞானத்தை வைத்த உங்களை ஒரு மனிதராகக் கண்டே மரியாதை செய்கிறோம் என்று கார்ல் மார்க்ஸ் பற்றி அவர் எழுதிய எழுச்சியூட்டிய ஒரு கவிதை,

நாடு நாடாக விரட்டப்பட்டீர்

ஊர் ஊராகத் துரத்தப்பட்டீர்
இன்று

ஒரு பகலைப்போல
வெளிப்படையாகவும்
ஒரு பூகம்பம்போலத்
தலைமறைவாகவும்
நீங்கள் நடந்து செல்லாத
நாடேது?
ஊரேது?

அவர் எழுதிப் பரபரப்பையும் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்த கவிதைகள் என கண்மணி ராஜம் ,ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலம், ஸ்ரீராஜராஜேச்சுவரியம் போன்ற கவிதைகளைக் குறிப்பிட வேண்டும்

     .இன்று மீண்டும் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டை திமுக ஆட்சி கொண்டாடியபோது இன்குலாபின் ஸ்ரீராஜராஜேச்சுவரியம் கவிதையின் வரிகளைத்தான் தமுஎகசவின் பல மேடைகளில் முழங்கினோம்:


ஆயிரம் ஆண்டு மூத்த என் தங்கையின்
காலில் கட்டிய சதங்கை
இந்தப் பெரிய கோயில் முற்றத்தில்
அழுது கொண்டிருக்கிறது
இன்னும்
இதனுடைய ஒவ்வொரு கல்லிலும்
என் சகோதரன் தசைகள்
பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.
வல்லாங்கு செய்யப்பட்டுப் பிறந்து கொண்டிருக்கும்
நான்
கூசி நிற்கிறேன்.

இந்தக் கவிதைகளும் யுகப்பிரளயம்,பிரமிடுகள் போன்ற நெடுங்கவிதைகளும் இன்று வாசிக்கையில் ஆயாசம் தந்தாலும் அன்று இளம் பருவத்தில் எமக்குக் கல்வி புகட்டிய கவிதைகளாக விளங்கின.கல்வி பற்றி அவர் எழுதிய வரிகள் இன்றைக்கும் எத்தனை பொருத்தப்பாடுடையவையாகத் திகழ்கின்றன:

தாமரைப் பீடத்தில்

இருந்த சரசுவதியை

நிலப்பிரபுத்துவம்

எழுப்பிக்கொண்டுபோய்

ஏகாதிபத்தியத்தின்

மடியில் அமர்த்தியது.

கலைமகள் பின்பு
கவுன் மாட்டிக்கொண்டாள்

வீணையிலிருந்து
இங்கிலீஷ் ம்யூசிக்.
தொழிற்சங்கங்களின் தேவை,
பணி பற்றிய நக்சல் பார்வை 

கொண்ட அவருடைய கவிதை வரிகள் அப்போதும் எனக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை.இப்போதும் ஏற்க முடியவில்லை.

புரட்சி ஓங்குக                                                                                                                                                                   
என்ற இடிகளின் முழக்கத்தை
ஒலிக்க வேண்டிய உனது பேரிகை
“ கூலி உயர்வு

போனஸ்”

என்று கொசுக்களைப் போலவா
முணங்கித் திரிவது?

வர்க்கபோதம் அல்லது வர்க்க உனர்வு என்பது தானே தொழிலாளி வர்க்கத்துக்கு வந்து சேராது.அது தொழிற்சங்கப் போராட்டங்களின் வழியே ஊட்டப்பட்டு உருவாக்கப்படுவதுதான்.லெனின் காட்டிய வழியும் அதுதான்.

தொழிற்சங்க இயக்கத்தின் மீது ஆரோக்கியமான விமர்சனம் வைக்கலாம்.ஆனால் கொசுவென்று பேசிக் கொச்சைப்படுத்தும் பார்வையை என்னால் ஏற்க இயலாது.

அதே போல பகத்சிங் சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசியதை நக்சல் பாதைதான் சரியானதென்று சிம்பாலிக்காக காட்டுவதாக எழுதப்பட்ட கவிதையும் நெருடா பற்றிய கவிதையில் சிலிப் புரட்சி  காரணம் அவர்கள் வாக்குச்சீட்டை நம்பி நக்சல் பாதையில் ஆயுதம் ஏந்திப் போகாததுதான் என்றெல்லாம் எழுதியிருப்பது

 வாசிக்கும்போதே ஓவராத்தான் எழுதிட்டார் தோழர் என்று நினைத்ததுண்டு.ஆனாலும் அது அவருடைய பாதை.

அவருடைய தேர்வு.அவருடைய சுதந்திரம்.நம் கருத்து நம்மோடு.அதற்காக அன்பே உருவான இனிய அம்மனிதரை நம்மால் கடந்து செல்ல முடியுமா என்ன?
என்பதை சிந்திப்போம்.

புதுக்கவிதை முனைவர்.இரா.குணசீலன்.

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)


முன்னுரை
காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி,கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்
·         புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்
·         பழையன கழிதலும் புதியன புகுதலும்
        வழுவல கால வகையினானே  என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல்

யாப்புச் சிம்மாசனம்

எதுகைப் பல்லக்கு

தனிமொழிச் சேனை

பண்டித பவனி

இவை எதுவுமில்லாத

கருத்துக்கள் தம்மைத் தாமே

ஆளக் கற்றுக்கொண்ட புதிய

மக்களாட்சி முறையே புதுக்கவிதை

எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம்
        புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் காரணங்களாகும்.
·         ஆங்கிலப் புதுக்கவிஞர் எஸ்ரா பவுண்டு‘புதிதாக்கு’ (Make It New) என ஒரு கட்டளைச் சொற்றொடரைப் பிறப்பித்தார்.
·         “சுவை புதிது பொருள்புதிது வளம்புதிது சொல்புதிது சோதிமிக்க நவகவிதை” என்றார்பாரதி.
Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர், ரிம்போ, மல்லார்மே,ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன்,இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட்போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில்‘வசன கவிதை’ என்றும் பின்னர் ‘சுயேச்சா கவிதை’‘லகு கவிதை’ ‘விடுநிலைப்பா’ என்றும், “கட்டிலடங்காக் கவிதை“ என்றும் அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன.
புதுக்கவிதையின் வளர்ச்சி
வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்றபுதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத்தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால்காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார். அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும்.பாரதி வழியில் ந.பிச்சமூர்த்தி,கு.ப.ராசகோபலன்,வல்லிக்கண்ணன், புதுமைப்பித்தன்,போன்றோர் புதுக்கவிதைகளைப் படைத்துதமிழ்ப்புதுக்கவிதைகளை வளர்த்தனர்.
புதுக்கவிதை வளர்ந்த மூன்று காலகட்டங்கள்
1.        மணிக் கொடிக் காலம்
2.        எழுத்துக் காலம்
3.        வானம்பாடிக் காலம் ஆகிய காலகட்டங்களில்தோன்றிய தமிழ் இதழ்கள் புதுக்கவிதைத் துறைக்குப்பொலிவூட்டின
1.மணிக்கொடிக் காலம்
மணிக் கொடிக் காலத்தில் மணிக்கொடி என்ற இதழ்மட்டுமன்றி, சூறாவளி, காலமோகினி, கிராமஊழியன்,சிவாஜிமலர், நவசக்தி, ஜெயபாரதி ஆகிய இதழ்கள்புதுக்கவிதைகளை வெளியிட்டுவந்தன.  இவற்றுள்மணிக்கொடி இதழ் முதலில் தோன்றியதால்இக்காலத்தை மணிக்கொடிக் காலம் என்று அழைத்தனர்.இக்காலத்தில், புதுக்கவிதை முன்னோடிகளானந.பிச்சமூர்த்தி, கு.ப.ராசகோபாலன்,க.நாசுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர்மணிக்கொடிகாலத்துக் கதாநாயகர்களாக விளங்கினர்.
 2.. எழுத்துக் காலம்
எழுத்து, சரஸ்வதி, இலக்கிய வட்டம், நடை, தாமரை,கசடதபற, போன்ற இதழ்கள் இக்காலகட்டத்தில்புதுக்கவிதையை வளர்த்தன.ந.பிச்சமூர்த்தி ஆரம்பித்துவைத்த புதுக்கவிதை இயக்கம், எழுத்து இதழில்தொடர்ந்தது. மயன், சிட்டி, வல்லிக்கண்ணன்,ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிசுசெல்லப்பா,  க.நாசுப்பிரமணியன் போன்றோர் இக்காலத்துக்குசிறப்பு சேர்த்தனர்
3.வானம்பாடிக் காலம்
வானம்பாடி,தீபம், கணையாழி, சதங்கை முதலியஇதழ்கள் இக்காலத்தில் புதுக்கவிதைக்கு முன்னுரிமைதந்து வெளியிட்டன. புவியரசு, ஞானி,முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கைகொங்காண்டான், தமிழ்நாடன், சக்தி கனல்,மு.மேத்தா, தமிழன்பன்,  ரவீந்திரன் முதலியோர்வானம்பாடிக் கவிஞர்களாவர்
                                   
        சில புதுக்கவிதைச் சான்றுகள்
  நல்ல காலம் வருகுது                                                               உன்கையிலா கடிகாரம்?
   நல்ல காலம் வருகுது                                                                கடிகாரத்தின் கையில்
  தெருவிலே நிற்கிறான்                                                                            நீ!
குடுகுடுப்பைக் காரன்!                                           

முடிவுரை
 மாறும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாததுஎன்பதற்குத் தக்க சான்றாக புதுக்கவிதை வளர்ச்சியைக்கூறலாம். மேற்கண்ட கட்டுரையின் வழியாக தமிழில்புதுக்கவிதையின் தோற்றத்தையும், அதன்வளர்ச்சியையும் நன்கு உணரலாம். mybrotherunathamizhblogspot.com

புதுமைப்பெண்- பாரதியார்

                                    

                                               புதுமைப்பெண்- பாரதியார்

                     


                 ஆண் கல்வி கற்றால், அது குடும்பத்திற்கு மட்டும் பயன் தரும்; ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் குடும்பம், நாட்டிற்கும் பயன்தரும்.

'பெண்ணுக்கு பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ என்ற பாரதிதாசனின் பெண்ணுரிமை உணர்ச்சி வரிகள் நாட்டின் பெண் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்தது.


எது பெண் சுதந்திரம் :

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு உள்ள சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டு தான், அந்நாட்டின் மனித உரிமைகள் எந்த அளவிற்கு மதிக்கப்படுகிறது என்பதை அளவுகோலாக வைத்துள்ளனர்.
துன்பம்நீக்கும் சுதந்திரப் பேரிகை என்று பாரதி பாடுகிறார்.

பெண் சிந்தனை:

இந்தியாவில், தேசிய விடுதலை இயக்கத்தில் பெண்கள் துணிந்து பங்கெடுத்த பின்னர் தான், தங்களுடைய சமூக கவுரவத்தை பற்றி ஆழமாகசிந்திக்கவே தொடங்கினர்.
ராஜாராம் மோகன்ராய் தொடங்கி காந்தி, அம்பேத்கர், மகாராஷ்டிராவின் புலே, கேரளாவில் நாராயணகுரு, ஆந்திரா வில் வீரசேசாங்க பந்தலு, பசுவய்யா, கர்நாடகத்தில் சித்தராமையா, தமிழகத்தின் ஈ.வெ.ராமசாமி, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.

'விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர்;விடுதலை என்பீர்; கருணை வெல்ல மென்பீர்; பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை” 

என பெண்ணுக்கு சுதந்திர வாழ்வு இல்லை என்றால் இந்த உலகில் மனிதனுக்கு வாழ்வில்லை என அன்றே பாரதி எச்சரித்துள்ளான். 

* வரலாற்று காலம் முதல் பெண்கள் போகபொருளாகவும்,அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் வாழப் பழக்கப்படுத்தப் பட்டனர்.

* இந்நிலையில் இருந்து, படிப்படியாக மீண்ட நிலையே இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக உள்ளது.

* 1789 ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடந்த, பிரெஞ்சு புரட்சியின்போது பாரிஸில் பெண்கள் போர்க் கொடி துாக்கினர். 'ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும்,' என குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.


பெண் உரிமை:

பணிக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, வாக்குரிமை, அடிமைகளாக நடத்தப்படுவதில் இருந்து பெண்களுக்கு விடுதலை போன்றவை முன் வைக்கப்பட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 


அவர்களை சமாதானம் செய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னர் வாக்குறுதி அளித்தார்.
வாக்குறுதியை நிறைவேற்றாமல் போகவே அவர் பதவி இழந்தார்.இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இக்கால கட்டத்தில் இத்தாலியிலும் தங்களுக்கு வாக்குரிமை கேட்டு பெண்கள் போராடினர்.

கிரிஸ் நாட்டின் விஸிஸ்ட்ரா என்பரின் தலைமையில் டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் பெண் பிரதிநிதிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்க தொடங்கியது.

முதல் பெண் வெற்றி : பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில்,
இரண்டாவது குடியரசை நிறுவிய லுாயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைகுழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தார்.
அந்த நாள் மார்ச் 8, 1848 ஆகும். உலக பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே 'மகளிர் தினமாக' அமைய அடிப்படை வித்தாக அமைந்தது.

இந்தியாவில் பெண்கள் :

இந்திய பெண்கள், திருமணம் ஆகும் வரை தந்தை சொல் கேட்கிறவளாகவும், திருமணத்திற்கு பின் கணவனுக்கு அடிமை யாகவும் கணவன் இறந்த பிறகு மூத்த மகனின் கட்டளைக்கு அடங்கி நடப்பவளாக பேதமைப்படுத்தப்பட்டு வருகிறாள்.

அனைத்து நாடுகளிலும் 'சராசரி பெண்' என்று அடையாளம் காண முடியும். ஆனால் இந்திய நாட்டில் மட்டும் தான் சராசரி பெண் என்று கோடிட்டு காட்ட முடியாது.

ஒரு நேர் கோட்டில் நாம் முன்னே இருக்கிறோம் என்பது தவறு, ஒரு வளையத்தில் நாம் எங்கோஇருக்கிறோம். எங்கே இருக்கிறோம் என்பதில் தான் நமது வாதம் முடிவாகாமல் இருக்கிறது. மாற வேண்டும்

இரண்டாம் நிலை : நமது சமுதாய கட்டமைப்பு பெண்களை இரண்டாம் நிலையில் தான் வைத்து உள்ளது. நாம் பெண் விடுதலை பற்றி என்னதான் பேசினாலும், பெண்கள் எல்லாத் துறைகளிலும் வளர்ந்து வந்தாலும், : நகர்ப்புற பெண்கள் சிந்தனையாலும், தொழிலாலும், பொருளாதாரத்தாலும் முன்னடைவு அடைந்திருந்தாலும், கிராமப்புற பெண்கள் இன்னும் நலிந்த நிலையில் தான் உள்ளனர்.

'கல்வியில்லா பெண்கள் களர்நிலம் கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி” 

என்ற பாரதிதாசனின் எண்ணத்திற்கேற்ப பெண்களுக்கு கல்வி, பேச்சு மற்றும் அடிப்படை உரிமைகள் என்று முழுமையாக கிடைக்க பெறுகிறதோ அன்று தான் நம்நாடு முன்னேற்ற பாதையில் வீறுநடை போடும்.
உறுதி ஏற்போம் .

விதைகளை காப்பாற்றி செடிகளை பிறப்பிக்கிற நிலம் தான் அடிக்கடி கொத்திக்கிளறப்படுகின்றன. 

அதுபோல் தான்  பெண்கள்அறியாமை என்ற இருளில் இருந்து விடுபட்டு கல்வியறிவு பெற்று, சுதந்திரம் அடைந்து,

 ஆண்களுக்கு நிகராக உரிமை பெறவும், பாலியல் கொடுமைகள் நீங்கி, பாரதி கண்ட புதுமை பெண்ணாக வாழ உறுதி ஏற்போம்!