Wednesday, November 14, 2012

என்று மாறும் இந்த நிலை


திட்டுவாங்காமலும் ...

வருடத்தில் ஒரு  முறை இவர்களுக்கு மகிழ்ச்சி



ஆசிரியரிடமிருந்தும்
பெற்றோரிடமிருந்தும்

 அடி வாங்காமலும்

இருக்கும் நாள்

அந்த நாள் இந்த நாள்
என்னவென்று தெரியுமா!
குழந்தைகள் தின விழா

அப்பாடா எப்படியோ

இன்றைக்காவது

நிம்மதியா விட்டாங்களே! என்று

எண்ணும் குழந்தைகளையும்

எண்ணாமல்

 ஏங்கித் தவிக்கும்
குழந்தைகளையும்
நினைத்துப் பார்க்க வேண்டும்

மனதார
அவர்கள் வாழ்க்கைக்குச் சிறு கடுகளவாவது

உதவி செய்ய முன் வந்தால் ,

மனித இனம் மதிப்போடு

இவ்வையத்தில் வாழும்...

Tuesday, August 14, 2012

சுதந்திர காற்று எங்கே?


சுதந்திரம் பெயருக்கு மட்டும் தான்
வறுமையின் மனம் இன்னும் வாடிக்கொண்டிருக்கையில்
வளர்ந்துவிட்டோம் என்று சொல்வதில் நியாயம் என்ன?
எங்கே எதில் வளர்ந்தோம்
அறிவியல் வளர்ச்சி மேலோங்க மேலோங்க ...
மனித வளர்ச்சி இன்று மண்மூடிக் கொண்டிருப்பதை
அறிந்தும் அறியாமல் உலக அரங்கில் நடைபோட்டுக்கொண்டிருக்கின்றோம்......ஆக நாம்
சிந்திக்கவும் செயல்படுத்தவும் முன் வந்தோம் என்றால்
சுதந்திரம் உயிர் பெறும்.
அப்போது தான் _ இவர்களின்
புலம்பலுக்கு புது வழி கிடைக்கும்.
அறிவு வளர்ச்சி ......
1.மரம்(மனம்) அழிவதால்
 குருவி(மனிதன்) புலம்பல்
கூடுகட்ட (வாழ்க்கை) இடமில்லையே .......


Tuesday, July 10, 2012

குப்பையை வைக்காதே

நம்மில் பலர் மற்றவர்களை குறைகூறிக் கொண்டு வருகின்றோம்.-ஆனால்
நம்மை பற்றி நாம் சிந்திப்பது கிடையாது.
சிந்தனை செய் மனமே!

அடுத்தவர்களின் குறைகளைப் பற்றிஆயிரம் சொல்வோம்-நம்
குறைபற்றி நாம் சொல்ல முயல்வது கிடையாது
அமைதியாக இருப்போம்.
இது தான் இன்றைய போக்கு
இந்த நிலைமாற வேண்டும்
குறைகளை கூறும் குப்பை மனமே!
நிறைகளை கூறி  நிம்மதியாக வாழ்வாய்


வள்ளுவர்குறள்;
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.