Tuesday, July 10, 2012

குப்பையை வைக்காதே

நம்மில் பலர் மற்றவர்களை குறைகூறிக் கொண்டு வருகின்றோம்.-ஆனால்
நம்மை பற்றி நாம் சிந்திப்பது கிடையாது.
சிந்தனை செய் மனமே!

அடுத்தவர்களின் குறைகளைப் பற்றிஆயிரம் சொல்வோம்-நம்
குறைபற்றி நாம் சொல்ல முயல்வது கிடையாது
அமைதியாக இருப்போம்.
இது தான் இன்றைய போக்கு
இந்த நிலைமாற வேண்டும்
குறைகளை கூறும் குப்பை மனமே!
நிறைகளை கூறி  நிம்மதியாக வாழ்வாய்


வள்ளுவர்குறள்;
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.

Thursday, July 5, 2012

புதுமுக வகுப்பு


வலையுலக நண்பர்களே

அனைவருக்கும் வணக்கம்

கடந்த 02.07.2012 அன்று பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் இணைந்து விட்டேன்

Tuesday, April 24, 2012

காதல் செய்யுங்கள்

இனிய நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.


காலம் அனைத்தையும்


வெல்லும் ஆற்றல் படைத்தது
.
உயிர் இருக்கும் வரை இணைந்திரு
உடல் ஒரு பூ போன்றது

தினமும் நம்மை சுற்றி
 எத்துணை நிகழ்வுகள் நடக்கின்றன

அவைகளில்சில நமக்கு பிடிக்கின்றன.

சில பிடிக்காமல் போகின்றன





இதற்கெல்லாம்  ஒரே    காரணம்

அவைகளை  அலட்சிய படுத்துவது  தான் ...

ஆக அவைகளை நாம்

இரசிக்க கற்றுக் கொள்ளவதற்கு முன்

பசியும்,இரசனையும் வர வேண்டும் -அப்படி வந்தால்
ருசி என்ற காதல் பிறக்கும்
அப்போது வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும்.............

தேனாகும்-அது விருந்தாகும் எல்லோருக்கும்

உங்கள் வாழ்க்கை வசந்தமாக
காதல் செய்யுங்கள்
காலம் கை கூப்பும்..........