Thursday, February 10, 2011

பூ வருமா?

பூ வருமா?
நினைவு அலைகளில்
நீந்திக் கொண்டிருக்கும்
காதல் பூவை
காற்றில் பறக்க விட்டு
ஏங்கி தவிக்கும்
காதலனின் ஏக்கத்திற்கு
தாகம் தணிக்க வருமா?
அந்த காதல் பூ

Saturday, January 1, 2011

புதிய எழுச்சி

அன்னை வழியிலே அனைவரும் நடக்க வேண்டும்
ஆன்றோர் சொல் படி கேட்க வேண்டும்
இன்முகத்தோடு அனைவரும் ஏற்க வேண்டும்
ஈன்ற நெஞ்சம் குளிர வேண்டும்
உண்மையாய் வாழ வேண்டும்
ஊர் புகழ வேண்டும்
எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும்
ஏன்? எதற்கு? என்ற கேள்வி எழ வேண்டும்
ஒரே வழி அது நல்வழி பின்பற்ற வேண்டும்
ஓதல் தான் சிறந்ததென நம்ப வேண்டும்
சமத்துவமே- நமது
தத்துவமென நிலை மாற வேண்டும்
சாக்கடை போல் ஓடாது
பூக்கடை போல் மணக்க வேண்டும்
சாதனைகள் பல புரிந்திட வேண்டும்-நம்
சோதனைகள் பல அகன்றிட வேண்டும்
சரித்திரத்தில் இடம் பெற வேண்டும்
தரித்திர பிசாசு நம்மை விட்டு அகழ  வேண்டும்
வாழ்க்கை வாழ்வதற்கே !
வளம் பெறுவதற்கே!
வரலாறு படைப்போம்
புதிய எழுச்சியுடன் புறப்படுவோம்
புதிய நோக்கில்-நம் பயணம் பயணிக்கட்டும்.....

Thursday, December 2, 2010

சிந்தியுங்கள் சாதனையை சந்தியுங்கள்

 பொய் என்ற போதும்
உண்மை பேச துடிக்கும்
மனித குலம்
உண்மை பேச என்றும்
துணிவதில்லை-அதற்காக
அமைதியே என் வழியென்று
சொல்லிக்கொண்டு செல்லும்
மனிதகுலம்
இந்நிலையில் நம் வாழ்வு
எங்ஙனம் அமையும்.
நாளைய வருங்காலத்தை
வளமானதாக்கவும்,
நாளைய சமுதாயத்தை
ஒழுக்காக்கவும்,
 சிந்தியுங்கள் சாதனையை சந்தியுங்கள்